Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டிக் குரு, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதன் எதிரொலியாக தமிழகத்தில் அங்கங்கே வன்முறை வெடித்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில், பேருந்து மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட அங்கு நடக்க இருந்த பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் ஓடும் பேருந்தின் மீது வன்முறையாளர்கள் வெடிகுண்டு வீசியதில் ஜன்னலோரம் இருந்த மூன்று பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு மேலும் அசம்பாவிதம் ஏற்படாதவாறு, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது. மரக்காணம் கலவரத்தை அடுத்து வன்முறையைத் தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கடந்த திங்கள் அன்று நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தின் போது எச்சரிக்கை விடுத்து இருந்தார் தமிழக முதல்வர்.

இந்த எச்சரிக்கையையும் மீறி, விழுப்புரம் மாவட்டம், நாமக்கல் மாவட்டம்  போன்ற சில மாவட்டங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக வன்முறை தாண்டவமாடி உள்ளது. இதைக் கட்டுப்படுத்த  காவல்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. இதற்கிடையில் ராமதாசின் ஜாமீன் மனு தள்ளுபடியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.

0 Responses to ராமதாஸ் கைது எதிரொலியாக தமிழகத்தில் அங்கங்கே வன்முறை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com