Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


பாகிஸ்தானில் சக கைதிகளால் தாக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த இந்தியரான சரப்ஜித் உடல், இன்று இரவுக்குள் தனி விமானம் மூலம் இந்தியா வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் நகரில், முழு மாநில அரசு மரியாதையுடன் நாளை பிற்பகல் சரப்ஜித் சிங் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாகத் தெரிய வருகிறது.

பாகிஸ்தானில் உள்ள லாகூர் சிறையில் கடந்த வியாழன் அன்று இரவு, சிறையில் சரப்ஜித் சிங்குடன் இருந்த சக கைதிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் லாகூர் ஜின்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதே சரப்ஜித் சிங்குக்கு செயற்கை சுவாசம்தான் பொருத்தப்பட்டது என்றும், அவர் கோமா நிலையில்தான் கடைசி வரை இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று பின்னிரவு 1 மணிக்கு உயிரிழந்த சரப்ஜித் சிங்கின் உடல்  மருத்துவ கூறு செய்த பின்னர், தனி விமானம் மூலம் இன்று இரவுக்குள் வாஹா வழியாக பஞ்சாப் வந்தடைகிறது. பின்னர் சரப்ஜித் உடல் அவரது சொந்த ஊரான அமிர்தசரஸ் கொண்டு செல்லப்பட்டு அங்கு பிற்பகல் அரசு மரியாதையுடன் அவரது உடலுக்கு இறுதி சடங்கு நடக்க உள்ளது.

மேலும், இன்று மதியம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, சரப்ஜித் சிங் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். நாளை அவரது இறுதி சடங்கிலும் மத்திய அரசு சார்பாக முக்கிய அமைச்சகர்கள்  கொள்வார்கள் என்றும் தெரிய வருகிறது.

0 Responses to சரப்ஜித் சிங் உடல் நாளை அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் : பஞ்சாப் அரசு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com