கர்நாடகாவில் நடக்க உள்ள தேர்தலுக்கு கடைசிக் கட்ட பிரச்சாரத்தை இன்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மேற்கொண்டார்.
கர்நாடகாவின் குல்பர்க் நகரில் தமது பிரச்சாரத்தை முடித்து கொண்ட அவர், பாஜகவை மிகவும் கடுமையாகத் தாக்கி பேசியுள்ளார். கர்நாடக மாநிலத்துக்கு வரும் மே 5ம் திகதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. நாளை மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிய உள்ள நிலையில், இன்று கர்நாடக மாநிலம் குல்பர்க் நகரில் சோனியா காந்தி, தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கடந்த ஆண்டுகால பாஜக ஆட்சியை பற்றி கடுமையாகத் தாக்கி பேசியுள்ளார்.
மத்திய அரசு கர்நாடகத்துக்கு என்று ஒதுக்கிய நிதிகளை, பாஜக கொள்ளை அடித்துக் கொண்டு, மக்களை நடுத்தெருவில் விட்டு விட்டது. கர்நாடகா பொருளாதார ரீதியில் முன்பு எந்த அளவுக்கு முன்னேற்றத்துடன் இருந்ததோ, இப்போது, அந்தளவுக்கு பின் தங்கி உள்ளது. இதற்கு பாஜக அரசின் கொள்ளை அடிக்கும் கொள்கையே காரணம்" என்று கடுமையாக சாடி பேசியுள்ளார் சோனியா காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
0 Responses to கர்நாடகாவில் சோனியா காந்தி இன்று கடைசிக் கட்ட பிரச்சாரம் : பாஜகவை கடும் தாக்கு