பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகும் வரை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் நடத்த விட மாட்டோம் இதில் பாஜக மிக உறுதியாக உள்ளது என்று பாஜகவின் செய்தித் தொடர்பாளர் அனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் கூட்டத்தைக்கூட்டி அப்போது உணவுப்பாதுகாப்பு மசோதா மற்றும் நிலம் கையகப்படுத்தும் மசோதா ஆகிய இரண்டு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருகையில் பாஜக இப்படி மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளது.
நிலக்கரி சுரங்க விவகாரத்தில் சி பி ஐ மறுபடியும் அமைச்சர்கள் குழுவின் கையில் கூண்டுக் கிளியாக மாட்டிக் கொண்டுள்ளது என்றும், இந்த விஷயத்தில் சிறப்பு புலானய்வு குழுவின் விசாரணை தேவை என்றால், நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும். அப்போதுதான் சி பி ஐ சுதந்திரமாக செயல்படும் என்றும் கூறியுள்ள அனந்த குமார்,
பிரதமர் பதவி விலகும் வரை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் நடத்த விடமாட்டோம் என்று பாஜக சார்பில் அனந்த குமார் தெரிவித்துள்ளார். அதோடு பிரதமர் பதவி விலகும் வரை முறையான விசாரணை நடைபெறாது என்றும் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து ஐ பி எல் சூதாட்டத்துக்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய அரசுக்கு எதிராக வரும் 21ம் திகதி பாஜக சார்பில் நடக்கவுள்ள சிறை நிரப்பும் போராட்டம் தொடர்பான அணுகுமுறை குறித்து, கோவாவில் நடக்க உள்ள கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அனந்த குமார் கூறியுள்ளது குறிபிடத் தக்கது.
0 Responses to பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை நடக்க விடமாட்டோம் : பாஜக உறுதி!