Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முறைகேடுகளைத் தடுக்க ராணுவ தளவாடங்கள் கொள்முதல் வெளிப்படையாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

அரியானாவில் குர்கான் நகரில் தேசிய பாதுகாப்பு பல்கலைக் கழகம் அமைக்கப்பட உள்ளது பல்கலை கழகத்துக்கு அடிக்கல் நாட்டும் விழா  நடந்தது. அடிக்கல் நாட்டி பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், "ராணுவத் தளவாடங்கள் வாங்குவதில் முறைகேடு நடப்பதாக புகார்கள் வருகிறது. இதைத் தடுக்க தளவாடங்கள் வாங்குவதற்காக நடைமுறையில் மாற்றம் செய்ய வேண்டும்.

வெளிப்படையான முறையில் ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்க புதிய நடைமுறை வகுக்கப்படுகிறது. இதை அமல் செய்யும் போது, முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க முடியும். ராணுவம் எந்த நேரமும் போருக்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதற்கான  ஆயுதங்கள் வாங்கப்படுகிற அதே நேரத்தில் இந்தியாவில் ராணுவத் தளவாடங்கள் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பல்வேறு நாடுகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் காரணமாக இந்தியாவின் ராணுவ பலம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், இந்திய பெருங்கடலையும், அதன் அருகே உள்ள பகுதிகளையும் பாதுகாக்கும் திறனும், தகுதியும் இந்தியாவுக்கு உருவாகியுள்ளது. ராணுவத் தாக்குதலை சமாளிக்கும் அதே நேரத்தில் இன்டர்நெட் மூலம் நடக்கும் மறைமுக யுத்தத்தை சமாளிக்கவும் இந்தியா தயாராக உள்ளது. இதன் ஒரு  தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது.' என்று மன்மோகன்  சிங் பேசியுள்ளார்.

0 Responses to இராணுவ தளவாடங்கள் கொள்முதல் வெளிப்படையாக செய்ய ஏற்பாடு; பிரதமர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com