யாழ்ப்பாணம் வேலணை தான் அங்கயற்கண்ணி பிறந்த ஊர். யாழ்ப்பாணமும் அதை
ஒட்டியுள்ள சப்த (ஏழு) தீவுகளும் சேர்ந்ததுதான் யாழ் குடா நாடு. அனலைத்
தீவு, எழுவைத் தீவு, காரைத் தீவு, நயினாத் தீவு, புங்குடு தீவு, மண்டைத்
தீவு, வேலணைத் தீவு - என்று அந்தத் தீவு வரிசையில் ஏழாவதாக வருகிறது வேலணை.
வேலணையில் அங்கயற்கண்ணி குடும்பத்துக்குச் சொந்தமான காணி இருந்தது. அந்த நிலத்தை ஆக்கிரமிப்பு சிங்கள ராணுவத்திடம் இழந்த பிறகு யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியிலுள்ள கொக்குவில்லுக்குக் குடிபெயர்ந்தது அவளது குடும்பம். கொக்குவில் யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறைக்குச் செல்லும் சாலையில் உள்ளது. அங்கே குடிபெயர்ந்தபோது அங்கயற்கண்ணிக்கே கூடத் தெரியாது அந்தச் சாலை வழியாக இல்லாமல் கடல்வழியாகத் தான் காங்கேசன் துறை நோக்கிய தனது பயணம் அமையப் போகிறது என்பது.
கடலால் சூழப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தின் கடற்கரைகள் வினோதமானவை. ஒவ்வொரு கரைக்கும் ஒவ்வொரு சுபாவம். பிரபாகரன் பிறந்த வல்வெட்டித் துறை கடற்கரை அலையே இல்லாது ஏறக்குறைய ஒரு கடல் நீரேரி போல ஆர்ப்பாட்டம் இல்லாமல் பிரபாகரன் போலவே அமைதியாக இருக்கும். வேலணை அதற்கு நேர்மாறான கடற்கரை. நீண்ட வெண்மணற்பரப்பு உயர உயரமான சீற்றத்துடன் எழுகிற அலைகள் - என்று வேலணை ஒரு ஆவேசக் கடற்கரை.
கொக்குவில்லுக்கு வரும் முன்பே ஓங்கி அடிக்கிற வேலணையின் கடல் அலைகளைப் போலவே நீச்சல் பயிற்சிக்காக அங்கே அடிக்கடி வந்துசென்ற பெண் கடற்புலிகளாலும் கவரப்பட்டாள் அங்கயற்கண்ணி. அந்தப் போராளிகள் அந்தப் பகுதி மக்களுடன் இயல்பாகப் பழகியதும் அவர்களுக்கு இருக்கிற கஷ்டங்களைக் கேட்டுக் கொண்டதும் அதற்கு என்ன தீர்வு என்று தங்களுக்குள் பேசிக் கொண்டதும் அவளை அவர்கள்பால் ஈர்த்தது.
இன்றைக்கு நமது தமிழக மீனவர்களுக்கு இருக்கிற உயிராபத்து அன்றைக்கு வேலணை பகுதி மீனவர்களுக்கும் இருந்தது. மீன் பிடிக்கச் செல்பவர்கள் இலங்கைக் கடற்படையின் அச்சுறுத்தலாலோ தாக்குதலாலோ பாதி வழியிலேயே எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் கண்கலங்கத் திரும்பிவருவது அடிக்கடி நடக்கிற சம்பவமாக இருந்தது. தங்களது வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலையே அந்த மக்கள் அஞ்சி அஞ்சிச் செய்யவேண்டிய அவலநிலை. வயிற்றுப் பிழைப்புக்கான தங்கள் தொழிலை இயல்பாகச் செய்யமுடியாத நிலையில் அந்த மக்கள் கண்ணீரோடும் வறுமையோடும் காலந்தள்ளுவதைப் பார்த்தவள் அங்கயற்கண்ணி.
சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காமல் ஆட்டு மந்தையைப் போல் அடைபட்டுக் கிடக்கவில்லை அங்கயற்கண்ணியின் இதயம். அவர்களது கண்ணீர் துடைக்கப்பட வேண்டுமானால் ஆயுதம் ஏதுமில்லாத அப்பாவி மக்கள்மீது ஆயுதப் பிரயோகம் செய்யும் இனவெறி பிடித்த கடற்படைக்குப் பாடம் புகட்டவேண்டும் என்று நினைத்தாள். அதற்கான ஒரே வழி கடற்புலிகள் அமைப்பில் இணைவதுதான் என்று உறுதியாக நம்பினாள். கொக்குவில்லுக்கு வந்தபிறகு அங்கயற்கண்ணி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்ததன் பின்னணி இதுதான்.
வேலணையில் தன் குடும்பத்துக் காணியெல்லாம் பறிக்கப்பட்டபோதே திருப்பி அடிக்கவேண்டும் - என்கிற எண்ணம் வேர்விட்டிருக்க வேண்டும் அங்கயற்கண்ணிக்குள்! கடற்புலிகள் அமைப்பில் சேர்ந்தவுடனேயே தான் கரும்புலியாக இருக்க விரும்புவதைத் தெரிவித்தவள் அவள். கொலைவெறி பிடித்த திமிங்கலம் போல் தங்கள் கடல்பகுதியில் நடமாடும் சிங்கள இனவெறி கடற்படையின் கப்பல்களில் ஒன்றையாவது தகர்க்கவேண்டும் - என்பதுதான் அவளது கனவாக இருந்தது.
வேலணையில் இருந்தபோதும் சரி கொக்குவில்லுக்கு வந்த பிறகும் சரி இருட்டியபிறகு வெளியே போவதென்றால் தாயின் துணையின்றிப் போகத் துணியாதவள் கயல். தாயின் அரவணைப்பில் குழந்தையாகவே இருந்தவள். இயக்கத்தில் அவள் சேர்ந்ததை அவளை அறிந்த எவராலும் நம்பமுடியவில்லை.
இயக்கத்தில் சேர்ந்ததிலிருந்தே போட்டிகளில் முதலிடம் தொடர்ந்து குழுத் தலைவி - என்று முன்னணியிலேயே இருந்தாள் அங்கயற்கண்ணி. தொடக்கத்தில் லெப்டினென்ட் கேர்னல் பாமாவின் தலைமையில் கடற்கண்காணிப்பில் ஈடுபட்ட குழுவில் அவளும் இடம்பெற்றிருந்தாள். மரபு வழிப் போரில் விடுதலைப் புலிகள் எவ்வளவு திறன் படைத்தவர்கள் என்பதை உலகுக்கு உணர்த்திய பூநகரி படைத்தளம் மீதான 'தவளைப் பாய்ச்சல்' தாக்குதலின் போது பாமா அங்கயற்கண்ணியை உள்ளடக்கிய குழு கடற் கண்காணிப்பில் வெற்றிகரமாக ஈடுபட்டது.
அங்கயற்கண்ணியின் ஈடுபாடும் ஆற்றலும் மிக விரைவிலேயே அவளை 'கேப்டன்' நிலைக்கு உயர்த்தின. அங்கயற்கண்ணி கேப்டன் அங்கயற்கண்ணியாக அறிவிக்கப்பட்டாள். கரும்புலிகளுக்கான கடும் பயிற்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாள். அங்கயற்கண்ணி இயக்கத்தில் சேர்ந்ததுதான் தெரியும் அவள் குடும்பத்துக்கு! விரும்பி கரும்புலியாகி இருக்கிறாள் என்பது தெரியாது எவருக்கும்!
இயக்கம் கொடுக்கும் விடுமுறையில் ஒருமுறை தாயைப் பார்க்க கொக்குவில்லுக்கு வந்தாள் அங்கயற்கண்ணி. நன்றாகப் படிக்கவேண்டும் - என்று தம்பிகளுக்கு அறிவுரை சொன்னாள். தன்னைப் பற்றிக் கவலைப்பட்ட தாயிடம் 'என்னைப் பற்றிக் கவலைப்படாதே! நான் காத்தோடு காத்தா போயிடுவேன் அம்மா' என்று அவள் சொன்னதற்கு எவ்வளவு ஆழமான அர்த்தம் இருக்கிறது என்பதை அப்போது எவரும் உணரவில்லை.
காத்தோடு காத்தாக கேப்டன் அங்கயற்கண்ணி இரண்டறக் கலந்ததுஇ 1994 ஆகஸ்டு மாதத்தில். இந்திய சுதந்திர தினத்தன்று அவளது இறுதிப்பயணம் தொடங்கியதுஇ அன்று நள்ளிரவே அந்தப் பயணம் முடிவடைந்தது.
அன்று 1994 ஆகஸ்ட் 15ம் நாள். காங்கேசன் துறை துறைமுகத்தில் 45 அடி ஆழ கடல்நீரில் நிறுத்தப்பட்டிருந்த வடபிராந்தியத்துக்கான தலைமைக் கட்டளைக் கப்பலான 'அபித' தான் அவளது இலக்கு. மெலிந்த சரீரம் அவளுக்கு. 60 கிலோ கூட இருக்காது அவளது எடை. அவளது இலக்கோ 6300 டன் எடை கொண்ட ராட்சசக் கப்பல்.
326 அடி நீளமும் 51 அடி அகலமும் கொண்ட அந்தக் கப்பல் வட பிராந்தியத்துக்கான நடமாடும் தலைமையகமாகவே இருந்ததால் மிகவும் சக்தி வாய்ந்த ராடார்கள் அதில் பொருத்தப் பட்டிருந்தன. வலுவான ஆயுதங்களைத் தாங்கியிருந்தது அது. அப்படியொரு அதி சக்தி வாய்ந்த கப்பலை அழிக்கத் தேவையான ஆயுதங்கள் விடுதலைப் புலிகளிடம் இல்லை என்பதால் அந்தக் கப்பலைத் தொட்டுப்பார்க்கக்கூட புலிகளால் இயலாது என்று உறுதியாக நம்பியது சிங்களக் கடற்படை. அங்கயற்கண்ணி என்கிற உயிராயுத வடிவில் ஆழ்கடல் வழியே ஆபத்து வந்துகொண்டிருப்பதை அவர்கள் அறியவேயில்லை.
தாக்குதலுக்காக அங்கயற்கண்ணி புறப்பட்ட கடற்கரையிலிருந்து காங்கேசன்துறை துறைமுகம் 17 கடல் மைல். (ஏறத்தாழ 35 கிலோமீட்டர்.) சிறிது தூரம் வரை படகில் சென்றாலும் கடற்படை மோப்பம் பிடித்துவிடக்கூடும் என்பதால் மொத்தத் தொலைவையும் நீந்தியே கடப்பது என்று முடிவு செய்திருந்தாள் அங்கயற்கண்ணி. 'கவலையே படாதீங்க... பத்திரமாப் போவேன்.. இலக்கை அடிக்காமத் திரும்பமாட்டேன்' என்று புறப்படும் போது உறுதியுடன் சொன்னாள் தனக்குப் பிரியாவிடை கொடுத்த தோழிகளிடம். அவளது குரலில் ஒலித்த 'ஓர்மம்' (வைராக்கியம்) அவர்களை வியக்கவைத்தது.
சக பெண் கடற்புலிகளில் சிலர் அவளுடன் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை நீந்திச் சென்றனர். ஆழ்கடல் வரை சென்று அவளை வழியனுப்பினர். அவளைப் பிரிய மனமின்றி அவள் நீந்திச் செல்வதைக் கண்ணுக்கெட்டிய தூரம்வரை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அவள் தங்கள் பார்வையிலிருந்து மறைந்தபிறகே திரும்பினர் அவர்கள்.
மாலையில் தொடங்கியது அங்கயற்கண்ணியின் கடற்பயணம். கடற்கரையில் அமர்ந்து அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவளது தோழிகள். அத்தனை பேரின் மனத்திலும் அங்கயற்கண்ணி நீந்திச் சென்ற காட்சி மட்டுமே படர்ந்திருக்கவேண்டும். அந்த இரவில் அவர்களுக்கு சற்றுத் தள்ளி கடல் மட்டுமே அலைகள் வழியாகப் பேசிக் கொண்டிருந்தது.
கடலின் இன்னொரு முனையில் காங்கேசன் துறையை சுமார் எட்டரை மணி நேர நீச்சலுக்குப் பின் எட்டியிருந்தாள் அங்கயற்கண்ணி. எட்டரை மணி நேரத்தில் 17 கடல் மைலை நீந்திக் கடக்க வைத்தது அவளது உடல் வலிமையாயிருக்க வாய்ப்பில்லை... அது அவளது மன வலிமை!
ஆகஸ்ட் 16ம் தேதி அதிகாலை 12.35 மணி..... அங்கயற்கண்ணி என்கிற உயிராயுதம் காங்கேசன்துறை துறைமுகத்தில் வெடித்துச் சிதறியது. சுமார் 50 கிலோ எடையே இருந்த அந்த உயிராயுதத்தின் தாக்குதலில் 6300 டன் எடை கொண்ட 'அபித' வெடித்துச் சிதறியது. அதன் பாதுகாப்புக்காக அருகில் நின்றிருந்த பீரங்கிக் கப்பலான டோரா கப்பல் ஒன்றும் உடன்கட்டை ஏறுவதைப் போல் அபிதவுடன் சேர்ந்து சாம்பலானது.
அதிர்ந்து போனது சிங்களக் கடற்படை. எந்தத் தாக்குதலாலும் தகர்க்க முடியாது என்று அவர்கள் நினைத்த கட்டளைக் கப்பல் அவர்கள் கண்ணெதிரிலேயே தீப்பிழம்பாக எரிந்துகொண்டிருந்தது. அவர்களது கனவுக் கோட்டைகளில் ஒன்று - அபித. அந்தக் கோட்டை அவர்களது கண் முன்னாலேயே ஜலசமாதி ஆகிக்கொண்டிருந்தது.
காங்கேசன்துறையில் அபித கப்பல் தகர்க்கப்பட்ட வெடிச்சத்தம் பல மைல் தூரத்துக்குக் கேட்டது. கடலின் இன்னொரு முனையில் அங்கயற்கண்ணியை வழியனுப்பிவிட்டுக் காத்திருந்த பெண் போராளிகள் 35 கிலோமீட்டர் தூரத்திலிருந்து பெருத்த அதிர்வுடன் ஒலித்த அந்தப் பேரொலியைக் கேட்டவுடன் 'கட்டளைக் கப்பல் அவுட்' என்று உரக்க முழங்கினர். அது ஒரு நொடி கூட நீடிக்கவில்லை. அடுத்த நொடியே நினைத்துக்கூட பார்க்கமுடியாத அந்தச் சாதனையை உயிரைக் கொடுத்து நிறைவேற்றியிருக்கும் தங்கள் சகோதரி அங்கயற்கண்ணியின் நினைவில் ஆழ்ந்தனர் அவர்கள். கண்கலங்க ஓடிப்போய் கடற்கரையில் நின்றனர் அந்த நள்ளிரவில்... எங்கேயிருந்து அங்கயற்கண்ணி விடைபெற்றாளோ அந்தக் கடற்கரையில் கண்ணீரோடு நின்றனர்.
'உங்கள் தோழி சமுத்திரகுமாரி ஆகிவிட்டாள் அவளை என் மடியில் ஏந்தியிருக்கிறேன்' - என்று சொல்வதைப் போல் கூப்பிடு தூரத்தில் உரத்த குரலில் பேசிக் கொண்டேயிருந்தது அலைகடல். வரலாறும் அங்கயற்கண்ணியை அப்படித்தான் அழைக்கிறது - 'கடலன்னையின் பெண்குழந்தை' என்று!
50 கிலோ ஆயுதம் ஒன்று 6300 டன் அசுரனைத் தகர்த்த இந்த வீர வரலாறுஇ கோலியத்தை வீழ்த்திய டேவிட் கதையை வாசித்த எவரையும் அது உண்மையாகவே நடந்திருக்குமோ என்றுகூட யோசிக்கவைத்திருக்கும்.
இனப்படுகொலைதான் செய்கிறது இலங்கை - என்பது தெரிந்தே சிங்கள இனவெறி அரசுக்கு ஆயுதங்களை அள்ளி அள்ளிக் கொடுத்த ஈவிரக்கமற்ற அத்தனை நாடுகளுக்கும் அண்ணல் காந்தியைப் போல் தன்னுடைய வாழ்வையே செய்தியாக அனுப்பிவைத்தவள் அங்கயற்கண்ணி. 'இனப்படுகொலை செய்கிற இலங்கைக்கு நீங்கள் மேலும்மேலும் ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தாலும் எம் மக்களைக் காக்கப் போராடும் எங்களுக்கு ஆயுதமே வராது தடுத்தாலும் உயிராயுதம் இருக்கிறது எங்களிடம்... எச்சரிக்கை' என்பதே அந்தச் செய்தி. எக் காலத்துக்கும் பொருந்தக்கூடியது அந்த எச்சரிக்கை.
அங்கயற்கண்ணி சமுத்திரகுமாரியாக சரித்திரம் படைத்து உயிர் துறந்தது கொக்குவில்லில் அவளது தாய்க்குத் தெரியவந்தது. இரவில் தன் துணையில்லாமல் வெளியே போகப் பயப்படும் அந்தப் பிள்ளை 35 கிலோமீட்டர் தூரத்தை நீந்தியே கடந்திருக்கிறாள் - என்பதை அவளால் நம்பவே முடியவில்லை. 'பருந்துகிட்ட இருந்து குஞ்சுகளைக் காப்பாற்றும் தாய்க் கோழி மாதிரி வேலணையிலிருந்து நான் பாதுகாப்பாகக் கூட்டி வந்த பிள்ளை' என்று சொல்லிச் சொல்லி அழுதாள். அந்தப் பருந்து எது என்பதை உணர்ந்தவர்கள் பெண் குழந்தைகளைக் கூட விட்டுவைக்காத அந்த பௌத்தப் பருந்துகளுக்கு அங்கயற்கண்ணி என்கிற கோழிக்குஞ்சு பாடம் புகட்டியிருப்பதை எண்ணி வியந்தனர்.
'நல்லூரில் திருவிழா நடக்கிற நேரம்தான் நான் சாகணும்' என்று அங்கயற்கண்ணி அடிக்கடி சொன்னதை நினைத்து அவளது தோழிகளான கடற்புலிகள் அழுதனர். ஏன் அப்படிச் சொல்கிறாள் - என்று புரியாமல் விளக்கம் கேட்டார்களாம் அவர்கள். அதற்கு அங்கயற்கண்ணி சொன்ன பதில் அவளது உயிர்த்தியாகத்தை விட உயர்ந்தது.
'நல்லூரில் திருவிழா நடக்கிற நேரத்தில்தான் கச்சான் வித்த காசு அம்மாகிட்ட இருக்கும். அந்தக் காசு இருந்தாத்தான் ஒவ்வொரு வருஷமும் என் நினைவு நாளுக்கு வீட்டுக்கு விசாரிக்கப் போகும் பிள்ளைகளுக்கு (சக பெண் போராளிகளுக்கு) அம்மாவால் நல்ல சாப்பாடு கொடுக்க முடியும்' என்று அங்கயற்கண்ணி சொன்னபோதே கண்கலங்கி அவளை அணைத்தவர்கள் அவள் இறந்த பிறகு அதைச் சொல்லிச் சொல்லி அழுதார்கள். எந்த அளவுக்கு அவளுக்குள் வைராக்கியம் இருந்ததோ அந்த அளவுக்கு அவளிடம் அன்பும் பரிவும் இருந்தது என்பதை அந்த வார்த்தைகள் உணர்த்தின. (கச்சான் - என்பது வறுத்த வேர்க்கடலை.)
உலகின் எந்த இலக்கியத்திலும் இப்படியொரு இதயத்தைப் பிழியும் பதிவு இருக்க வாய்ப்பேயில்லை. தன் மரணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் ஆண்டுதோறும் தன் நினைவுநாளுக்கு வீட்டுக்கு விசாரிக்கச் செல்வோருக்கு நல்ல சாப்பாடு கிடைக்கவேண்டும் அதற்கு வசதியாக - தாயின் கையில் காசு புழங்குகிற ஒரு பருவத்தில் தான் இறக்கவேண்டும் - என்று நினைக்கிற மனம் எங்காவது எவருக்காவதோ எங்கோ ஓர் இலக்கியத்தில் ஏதோ ஒரு கதாபாத்திரத்துக்கோ இருக்கும் என்றா நினைக்கிறீர்கள்? எங்கள் இனத்தின் இன்னொரு அடையாளமாகவே இன்றுவரை திகழும் எங்கள் குலக்கொழுந்து அங்கயற்கண்ணியைத் தவிர வேறெவருக்கும் அப்படியொரு கவலை எழுந்திருக்க வாய்ப்பேயில்லை.
நெல்லியடியில் அமைந்திருந்த அரக்கர்களின் முகாமைத் தகர்த்த மாவீரன் மில்லரில் தொடங்கி முப்பது பேருக்கு மேற்பட்ட கரும்புலிகள் இலங்கைக்கு சர்வதேசமும் வாரிவழங்கிய ஆயுதங்களைத் தங்கள் உயிராயுதத்தால் தகர்த்து எறிந்திருந்தார்கள் அங்கயற்கண்ணிக்கு முன்பே. அவர்கள் அனைவரும் ஆண்கள். அவர்களின் பட்டியலில் பெருமிதத்துடன் தன்னை அவள் இணைத்துக் கொண்டாள் முதல் பெண் கரும்புலியாக!
கரும்புலிகளின் பாடலாக இன்றைக்கும் உலகமெங்கும் ஒலிக்கிறது ஒரு உருக்கமான பாடல்.
'கரும்புலி என்றொரு பெயர்கொண்டு
கடும்பகை தகர்க்கிற வெடிகொண்டு
பெரும்படை அணி இன்றிப் போகின்றோம்
எங்கள் உயிராலே பகை வென்று சாகின்றோம்!
எங்களின் சாவொரு வரலாறு
அதில் எழுதிய வெற்றிகள் பலநூறு
இங்கிது போல் வீரம் வேறில்லை
உயிர் ஈதலே அறத்துக்கு மேல் எல்லை'
என்று தொடங்குகிற அந்தப் பாடல் கண்ணீராலேயே எழுதப் பட்டிருக்கும் ஒரு உருக்கக் கவிதை.
இப்படியொரு கவிதையை வார்த்தைகளால் எழுதாமல் தன் வாழ்க்கையால் எழுதியவள் அங்கயற்கண்ணி. 'காத்தோடு காத்தாகப் போயிடுவேன் அம்மா' என்று அன்று அவள் சொன்ன வார்த்தைகளின் அழுத்தத்தை என்றைக்கும் எழுதமுடியாது எந்தக் கவிஞனாலும்!
அங்கயற்கண்ணியின் தியாகம் எதனோடும் எவரோடும் ஒப்பிடமுடியாத உயிர்த் தியாகம். பல நூறாண்டுகள் அவள் பேசப்படுவாள் வணங்கப்படுவாள் போற்றப்படுவாள். காங்கேசன்துறையின் காற்று வெளிகளிலும் யாழ்ப்பாணத்துக் கடல்வெளிகளிலும் என்றென்றும் காற்றோடு கலந்து நிற்பாள் அந்த சமுத்திரகுமாரி. அவளைப் போன்ற எண்ணற்ற மாவீரர்களின் உயிர்மூச்சுதான் ஈழ விடுதலையின் மூச்சுக் காற்றாக உலவிக் கொண்டிருக்கிறது இன்றைக்கும்! அந்தக் காற்றுக்கு வேலிபோட இயலுமா - இலங்கைப் பகைவர்களாலும் இந்தியக் கயவர்களாலும்!

0 Responses to காற்றோடு காற்றாகக் கலந்த சமுத்திரகுமாரி! - புகழேந்தி தங்கராஜ்