ஜெயலலிதாவின் தோழி
சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகன் டாக்டர் வெங்கடேஷ். இவர்
அதிமுகவில் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளராக பதவி வகித்தவர். அப்போது
கட்சியினரிடையே மிகுந்த செல்வாக்கு மிகுந்தவராக திகழ்ந்தார். கடந்த ஒரு
ஆண்டுகளுக்கு முன்பு, இவரது பதவி பறிக்கப்பட்டது. அதன்பிறகு கட்சி பணிகளில்
இருந்து ஒதுங்கி இருந்தார்.
இந்த
நிலையில் இன்று (28.05.2013) நிலமோசடி புகாரில் சென்னையில் உள்ள அவரது
இல்லத்தில் தஞ்சை போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை
விசாரணைக்காக தஞ்சை கொண்டு செல்கின்றனர் போலீசார்.
0 Responses to சசிகலாவின் சகோதரர் மகன் டாக்டர் வெங்கடேஷ் கைது!