கரூர் மாவட்டத்தில்
அரவாக்குறிச்சி காங்கிரஸ்காரர் சதாசிவம் சிலை திறப்பு விழாவிற்காக மத்திய
அமைச்சர் ஜி.கே.வாசன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.
இளங்கோவன் ஆகியோர் திருச்சியில் இருந்து கரூர் சென்று கொண்டு இருந்தனர்.
வண்டி
குளித்தலை தாண்டி மாயனூர் சங்கு நகரின் அருகே சென்றபோது, ஜி.கே. வாசன்
தன்னுடைய டிரைவரிடம் வண்டியை இந்த ஊரில் சேவதள மகிளா அமைப்பாளர் பார்வதி
வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளார். உடன் வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
முதல் போலீசார் வரை பதட்டம் அடைந்தனர்.
முன்கூட்டியே
திட்டமிடாத இடத்திற்கு தீடிர் என்று போக சொல்கிறாரே என்று எல்லோரும்
குழப்பம் அடைந்தனர். அப்போது ஜி.கே.வாசனை வரவேற்பதற்காக கரூரை சேர்ந்த
மாநில சேவாதள செயலாளர் ராஜேஸ், நான் தலைவர் வாசனுக்கு ஒரு கடிதம்
எழுதியிருந்தேன். நம்முடைய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பார்வதியின் மகன்
பாபுவுக்கு திருமணம்.
மாற்றுதிறனாளியான பாபுவின் திருமணத்தில் நீங்கள்
கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து இருந்தோம். அதை மறக்காமல்
இப்போது இந்த வழியே செல்லும் போது நினைவில் வைத்து செல்கிறார் என்று சொல்லி
அங்கே கூட வந்தவர்களுக்கு விளக்கம் கொடுத்தார்.
ஜி.கே.
வாசன் வந்து கொண்டு இருக்கிறார் என்கிற தகவலை சொல்வதற்கு ராஜேஸ் செல்போனை
எடுத்து பேசுவதற்கும், மணமகன் வீடு வருவதற்கும் சரியாக இருந்தது.
தீடிர்
என்று நம்முடைய வீட்டிற்கு பெரிய பெரிய கார் வருவதை பார்த்து அதிர்ச்சி
அடைந்து வெளியே வந்து பார்த்த சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீருடன் ஆரத்தி
எடுத்து அன்புடன் வரவேற்றனர் பார்வதியும் அவருடைய மகன் பாபுவும்.
தீடிர்
என்று வந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் அய்யா! ரொம்ப நன்றி என்று
திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருந்தனர். கூடவந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
தனக்கு சுடு தண்ணீர் வேண்டும் என்று கேட்டு வங்கி குடித்துவிட்டு
குடும்பத்தினரை நலம் விசாரித்தார். மணமக்களை வாழத்தி ரூபாய் 5,000 பணத்தை
அன்பளிப்பாக கொடுத்து மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் வாசன்.
தமிழகத்தில்
வாசன் கை குறைந்ததாக செய்தி பரப்பட்டு வருகிறது. இதனால் தனது ஆதரவாளர்கள்
சோர்வடையக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி வரும் வாசன், இனி இதுபோன்ற
செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவார் என்கின்றனர் அவருடன் வந்தவர்கள்.
செய்தி, படங்கள்: ஜெ.டி.ஆர்.
0 Responses to தொண்டன் வீட்டில் ஜி.கே. வாசன்! அதிர்ச்சி அடைந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்! (படங்கள் இணைப்பு)