பாகிஸ்தான் உளவாளி தமிம் அன்சாரி திருச்சி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
தஞ்சை
மாவட்டம் அதிராம்பட்டினம் ஆசாத் நகரைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி (வயது
35). இலங்கையில் வெங்காய வியாபாரம் செய்வதாக கூறி அடிக்கடி விமானம் மூலம்
இலங்கை சென்றார். இவர் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக க்யூ' பிராஞ்ச்
போலீசார் இவரை பின்தொடர்ந்தனர்.
தென்
மாநிலங்களில் உள்ள ராணுவ மையங்கள் துறைமுகங்கள் ஆகியவற்றை படம் பிடித்து,
இலங்கையில் செயல்படும் பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ.,க்கு இ-மெயில்
மூலம் அனுப்பியதாக கடந்த ஆண்டு செப்., 17ம் தேதி, திருச்சியில் இவரை கைது
செய்தனர்.
திருச்சி,
ஜே.எம்., - 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தமீம் அன்சாரி, திருச்சி
மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின், அவரை, கஸ்டடி'யில் எடுத்த,
"க்யூ' பிராஞ்ச் போலீசார், அவர் தங்கியிருந்த வீடு மற்றும் ராணுவ தளங்களை
படமெடுத்த இடங்களுக்கு, அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போது
தமீம் அன்சாரியின் ஐ.எஸ்.ஐ. தொடர்புகள் குறித்த சிடி ஆதாரம் சிக்கியது.
கஸ்டடி முடிந்ததும் திருச்சி மத்திய சிறையில், தமீம் அன்சாரி
அடைக்கப்பட்டார்.
இந்நிலையில்
தமீம் அன்சாரியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து, சிறையில்
அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான உத்தரவு நகலை பெற்ற, "க்யூ'
பிராஞ்ச் போலீசார், திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமீம்
அன்சாரியிடம் கொடுத்தனர். இதனால் தமீம் அன்சாரி ஜாமின் பெற்றிருந்தும்
வெளியே வரமுடியவில்லை.
இதையடுத்து
தே.பா.சட்டத்தை ரத்து செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் மனு
தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில் தமிம் அன்சாரி மீதான
தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது கோர்ட்.
இதையடுத்து இந்த வழக்கில் ஜாமீன் பெற்றிருந்த அன்சாரி இன்று மாலை திருச்சி சிறையில் இருந்து விடுதலை பெற்றார்.
0 Responses to தமீம் அன்சாரி விடுதலை