இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 56 பேரின் காவலை தலைமன்னார் நீதிமன்றம் மேலும் நீட்டித்து தீர்ப்பளித்துள்ளது.
இலங்கை கடற்படையினரால் சிறைப் பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள், கடந்த ஒரு மாதமாக இலங்கை அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் அவர்கள் தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போதே விடுதலை செய்யப்படுவார்கள் என்று, மீனவர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். இந்நிலையில் அவர்களுக்கான காவலை மேலும் நீட்டித்து, நீதி மன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பின் அடிப்படையை எதிர்த்து, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த தமிழக ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று, பலவேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இருந்தும் இப்பிரச்சனையில் சுமுகத் தீர்வு எட்டப்படவில்லை. இதை அடுத்து, மீனவர்கள் 56 பேரும் இன்று அனுராதபுரம் சிறையில் இருந்து மன்னார் நீதிமன்றம் கொண்டு வரப்பட்டனர். இப்போதாவது மீனவர்களின் விடுதலை இருக்கும் என்று, ராமேஸ்வரம் மீனவ குடும்பங்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்த நிலையில்,
இன்றும் நீதிமன்றம் மீனவர்களுக்கான காவலை மேலும் சில நாட்கள் நீட்டித்து மேலும் 20ம் திகதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் பெரும் கொந்தளிப்பு அடைந்துள்ளனர். அதோடு இன்னொரு விஷயமாக் இன்றும் கடலில் மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர் என்றும் தெரிய வருகிறது.
0 Responses to சிறையில் வாடும் தமிழக மீனவர்களின் காவல் மேலும் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம்