Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் அரசுக்கு எதிராகவும் இஸ்லாமிய மத அடிப்படையிலான தீவிரக் கொள்கைகளை நடைமுறைப் படுத்தக் கோரியும் சுமார் பத்தாயிரக்கணக்கான பொது மக்கள் ஒன்று கூடி நிகழ்த்திய மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் கலவரமானதில் 32 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.
மேலும் திங்கட்கிழமை போலிசார் அந்நாட்டிலுள்ள இஸ்லாமியத் தொலைக்காட்சிச் சேவை ஒன்றினையும் தடை செய்துள்ளனர்.

40 வருடங்களுக்கு முன் சுதந்திரம் பெற்றதிலிருந்து மேற்கொள்ளப் பட்ட ஆர்ப்பாட்டப் பேரணிகளில் இது மிகப்பெரிய ஒன்று எனத் தெரிவித்த பங்களாதேஷ் போலிசார் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 32 பேர் கொல்லப் பட்டும் நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தும் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் கைது செய்யப் பட்டும் உள்ளனர். இந்நிலையில் பங்களாதேஷின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான சிட்டாக்கொங்கிற்கு இந்த ஆர்ப்பாட்டம் பரவமால் தடுக்கப் பட்டதாக அரச தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் ஆர்ப்பாட்டம்  நிகழ்ந்த பகுதிகளில் வங்கிகள், பேரங்காடிகள் மற்றும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததாகவும் சில இடங்களில் கடைகள் எரிக்கப் பட்டும்  கூழாங்கற்களால் தாக்கப் பட்டும் உள்ளன.

ஏனைய மதங்களை மதித்தல் மற்றும் இஸ்லாமிய மதத்தை நிந்திக்காதிருப்பது தொடர்பான் புதிய சட்டத்தை (blasphemy law) அமுல் படுத்தக் கோரி டாக்காவின் மொட்டிஜீல் சதுக்கத்தில் முகாமிட்ட சுமார் 70 000 இஸ்லாமியர்களைக் கலைப்பதற்காக போலிசார் ஒலியை உருவாக்கும் கிரைனேட்ஸ் குண்டுகள், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தல்,கண்ணீர்ப் புகைக் குண்டு மற்றும் றப்பர் குண்டுகள் கொண்டு தாக்கி முயற்சித்த போதே இந்த உயிர்ப்பலிகள் ஏற்பட்டுள்ளன. பங்களாதேஷில் அடிக்கடி அரசுக்கு எதிராகவும் மதரீதியான கொள்கைகளை வலியுறுத்தியும் வன்முறைகள்  நிகழ்து வருகின்றன. இந்த ஜனவரி முதற்கொண்டு இவ்வன்முறைகளில் 140 பேர் மரணமடைந்துள்ளனர். பங்களாதேஷின் மொத்த சனத்தொகையில் 90% வீதமானவர்கள் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம் கலவரமானது:போலிஸ் பொது மக்கள் மோதலில் 32 பேர் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com