Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


மே 18, 2013, சனிக்கிழமை, மாலை 5:00 மணிக்கு கனடாவில் ரொறன்ரோ மண்ணில், குயின்ஸ் பார்க் (ஒன்ராரியோ பாராளுமன்ற) முன்றலில், முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நான்காம் ஆண்டு நினைவாக 'தமிழினப் படுகொலை நாள் 2013' நிகழ்வானது மாபெரும் மக்கள் எழுச்சியோடு ஓரணியில் அணி திரண்ட பேரணியாக எழுச்சிகரமாக நடைபெற்றது.
விடுதலைக்காக விதைக்கப்பட்டவை என்றோ ஒரு நாள் தலைமுறைகள் கடந்தாலும் மறுபடியும் பலமுறைகள் முளைத்தே தீரும் என்பதற்கு முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை ஒரு சிறந்த எடுகோள்.

கனடியத் தமிழர் தேசிய அவையின் ஒருங்கிணைப்பில் கனடாத் தமிழர் சமூகமும், மாணவர் சமூகமும் மற்றும் ஏனைய அமைப்புக்களையும் பொதுமக்களையும் உள்ளடக்கிய மக்கள் சமூகமாக ஒருங்கிணைந்து இந்த மாபெரும் நிகழ்வு நடந்தேறியது.
2008 ஆம் ஆண்டில் தமிழீழ தேசியத் தலைவர் தன் மாவீரர் நாள் உரையில் கூறியது போல இன்று எம் தமிழீழ தேச விடுதலைப்போராட்டம் புலத்துத் தமிழர்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு புலம்பெயர் நாடுகளிலும் உள்ள தமிழர்கள் இதனை சரியாக புரிந்து செவ்வனவே தம் காலக்கடமைகளை செய்து வருகின்றார்கள். அத்தகைய கால்பதிப்புகளில் ஒன்றாகவே இந்த வருட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவெழுச்சி நிகழ்வுகள் திகழ்கின்றது.
குறித்த நேரத்துக்கு சரியாக மாலை 5:00 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகின. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு கனடியத் தேசிய கீதம், தமிழீழத் தேசியக் கொடிப்பாட்டு, என்பன இசைக்கப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, ஈழ விடுதலைப் போராட்டத்தில் வீர்ச்சாவெய்தியமாவீரர்களுக்கும்அக்காலகட்டத்தில்அநியாயமாக  படுகொலைசெய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தி, பூவள்ளித் தூவி மலர் வணக்கம் செலுத்தி எழுகையோடு நிகழ்வுகள் ஆரம்பமாயின.
எழுச்சிப்பாடல்கள், எழுச்சி நடனங்கள் என்பனவற்றோடு எழுச்சி உரைகளும் இடம் பெற்றன. எழுச்சி உரைகள் வரிசையில் பின்வருவோர் உரையாற்றினார்கள்:
நிகழ்ச்சிகளை கனடியத் தமிழர் தேசிய அவையைச் சேர்ந்த தேவா சபாபதி மற்றும் இளையோர் அமைப்பைச் சேர்ந்த பிரியந்த் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.
ஒன்ராறியோ புதிய ஜனநாயக கட்சி சார்பில்அதன் தலைவர் நீதன் சண் (NEETHAN SHAN) எழுச்சியுரை ஆற்றியதோடு  ஒன்ராறியோ NDPகட்சி தலைவி ANDREA HORWATHமற்றும் அக்கட்சியைச் சேர்ந்த MPP JAGMEET SINGHஆகியோரின் உரைகளையும் பகிர்ந்து கொண்டார். இவர்களோடு NDP கட்சித் தலைவர் THOMAS MULCAIRஅவர்களும் வாழ்த்துரை அனுப்பி இருந்தார்.
லிபரல் கட்சியின் சார்பில் உரையாற்றிய MP JOHN MCCALLUMதனது உரையின் போது லிபரல் கட்சியின் தலைவர் JUSTIN TRUDEAUமற்றும் MP JIM KARIGIANNISஆகியோரின் உரையையும் வாசித்தார்.
MPP GLENN MURRAYதனது உரையின் போது Premier of Ontario Kathleen Wayneஇன் நினைவுரையையும் வாசித்துப் பகிர்ந்து கொண்டார். MPP GLENN MURRAY  அவர்கள் ஈழத் தமிழர்களுக்கு இன அழிப்பு நடப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு அதற்காக ஒவ்வொரு வருடமும் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களின் நினைவாக தனது தொகுதியில் மரம் நடும் திட்டத்தை அமுல்ப்படுத்துபவர்.
Ontario Progressive Conservative party தலைவர் TIM HUDAKஅவர்கள் இந் நிகழ்ச்சிக்காக விடுத்த பிரத்தியேக உரையும் வாசிக்கப்பட்டது.ack
இவர்கள் தவிர மார்க்கம் நகர சபை உறுப்பினர் திரு லோகன் கணபதி அவர்களும், தமிழர் தகவல் ஆசிரியரான திரு. திருச்செல்வம், கனடியத் தமிழர் தேசிய அவை சார்பில் கிருஸ்ணா சரவணமுத்து, இளையோர் (TYO) அமைப்பின் சார்பில் சங்கரி, CTYA சார்பில் ஜெனிற்  ஆகியோரும் எழுச்சிப் பேருரைகள் ஆற்றினார்கள்.
எழுச்சி உரைகளைத் தொடர்ந்து தீபங்கள் ஏற்றி ஒளிமுகம் தோறும் நினைவுகள் ஏந்தி வணங்கப்பட்டது. இனப்படுகொலை எமக்களித்த மறக்க முடியாத வரலாற்று சோகங்களின் அழுகையை எழுகையாக மாற்றி தமிழீழ விடுதலை இலக்கை நோக்கி உறுதியோடு பயணிப்போம் என முள்ளிவாய்க்கால் மண் மீதும் மரணித்த மக்கள் மீதும் சத்தியம் செய்து உறுதி மொழி கூறப்பட்டது.
தம் நெஞ்சில் கனலும் தமிழ் தேசிய உணர்வை மாபெரும் மக்கள் அலை வெள்ளமாக ஆயிரக்கணக்கில் அணி திரண்டு வருகை தந்து முள்ளிவாய்க்காலில் விடுதலைக்காய் பலியான அத்தனை உறவுகளையும் நினைந்து மலரள்ளித் தூவி நினைவுத்தீபம் ஏற்றி மாவீரர் கனவுகளை நனவாக்க மறுபடியும் எழுவோம் என சாவினைச் சரித்திரமாக்கியவர்களை நெஞ்சினில் ஏந்தி சத்தியம் செய்து சென்ற காட்சியானது விதைக்கப்பட்ட வீரம் மறுபடியும் பல்கிப் பெருகி முளைத்தே தீரும் என்பதற்கு சான்றாகிச் சரித்திரமாகி நிற்கின்றது.


























தமிழரின் தாகம் தமிழீழம் காணும் வரை தணியாது.
முள்ளிவாய்க்கால் முடிவல்ல!
இது இன்னொரு விடுதலைப் பயணத்துகான ஆரம்பம்!
மேலதிக தொடர்புகளுக்கு: கனடிய தமிழர் தேசிய அவை
தொலைபேசி:  416.830.7703 
மின்னஞ்சல்: info@ncctcanada.ca

0 Responses to கனடா ஒன்ராரியோ பாராளுமன்றம் முன்றலில் இடம்பெற்ற தமிழினப் படுகொலை நினைவு நாள் - மே 18, 2013

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com