Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்த ஆண்டு மே தின நிகழ்வை தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அகில இலங்கை தமிழ் காங்கிஸ் கட்சியும் இணைந்து யாழ் வடமராட்சியிலுள்ள கரவெட்டியில் நடாத்தின.

இம் மேதினக் கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்ட பிரதான விடயங்கள்.

·         தமிழர் தாயகம் முழுவதிலும் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட நிலப்பறிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகப் எதிர்த்துப்பேராடுவேம்.

·         தமிழ் மக்களின் நலன்களை பாதிக்கும் வகையிலும், தமிழ் மக்களை அவமானப்படுத்தும் வகையிலும், பிராந்திய, மேற்குலக சக்திகளது நலன்களை பேணும் நோக்கில் மட்டும் நிறைவேற்றப்படட nஐனிவா தீர்மானத்தை நிராகரிப்போம்.

·         தற்போது பிராந்திய, மேற்குலக சக்திகளின் நலன்களை முன்னிலைப்படுத்தியும் தமிழ் ம்ககளது நலன்களை முழுமையாகப் பாதிக்கும் வகையிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால்  முன்னெடுக்கப்படும் அரசியல் நகர்வுகள் நிராகரித்து சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான மாற்று அரசியலை முன்னெடுப்போம்.

·         தமிழ்த்தேசத்தின்; நலன்களின் அடிப்படையில் தமிழ்த்தேசத்திற்கான அரசியல் ,பொருளாதார, சமூக,கலாச்சார  கொள்கைகளை உருவாக்கி முன்னெடுப்போம்

·         தமிழ்த் தேசத்துக்கான வலுவான வெளிவிவகாரக்கொள்கையை உருவாக்கி செயற்படுத்துவோம்.
·         நிலம், புலம், தமிழகம் என்பவற்றை ஓரு நேர்கோட்டில் கொண்டுவந்து ஒருங்கிணைந்த செயற்பாட்டை முன்னெடுப்போம்.

·         தமிழக மாணவர்களினதும், மக்களின் எழுச்சியை நன்றியோடு வரவேற்பதுடன் இந்த எழுச்சி தமிழகத்தையும் தாண்டி இந்தியா முழுவதும் முன்னேற முழுஒத்துழைப்பினையும் வழங்குவோம்.

·         'உலகத் தமிழர்' என்ற பொது அடையாளம் வளர்ச்சிபெற நாமும் ஒத்துழைப்பு வழங்குவோம்.

·         தமிழ்த் தேசத்தில் தொடரும் கட்டமைப்பு சார் இன அழிப்பை தடுக்கவும், பொறுப்புக் கூறலை

இலகுபடுத்தவும்,  போரினால் பாதிப்படைந்த எமது உறவுகளின் வாழ்வாதாரங்களை கட்டியெழுப்புவதற்கும் சர்வதேச பாதுகாப்புடன் கூடிய ஒரு இடைக்கால நிர்வாகம் சீறிலங்கா அரசின் அதிகாரக் கட்டமைப்புக்கு வெளியே உருவாக்க வேண்டும்.

·         இன ஒடுக்குமுறைக்கும் வர்க்கஒடுக்குமுறைக்கும் ஒருங்கே முகம்கொடுக்கும் தமிழ்த் தொழிலாளர்கள், கூலி விவசாயிகள், மீனவர்கள் என்பவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்.

போன்ற விடயங்கள் பிரதானமாக உள்ளடங்கியிருந்தது.

மேற்படி மே தின நிகழ்வுக்காக கரவெட்டி அரசடி சந்தியில் ஒன்று கூடிய மக்கள் அங்கிருந்து ஊர்வலமாக சாமியன் அரசடி ஞானவைரவர் ஆலய முன்றலை சென்றடைந்தனர். மேடை நிகழ்வுகள் சட்டத்தரணி பாலகிருஸ்ணன் பார்த்தீபன் அவர்களது தலைமையில் இடம்பெற்றது. முதல் நிகழ்வாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சிக் கொடியினை கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் கொடியினை கட்சியின் தலைவர் இ.எ.ஆனந்தராசா அவர்களும் ஏற்றிவைத்தனர்.

அதனைத் தொடர்ந்து திருமதி பத்மினி சிதம்பரநாதன் அவர்களால் ஈகச் சுடரேற்றப்பட்டது.  அடுத்து தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்தவர்களை நினைந்து அக வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஆசிரியர் செல்வி அந்தோனிப்பிள்ளை ஜஸ்மின் அவர்களது மாணவிகள் வழங்கிய வரவேற்பு நடனம் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து சமூக அமைப்புக்களது தலைவர்கள் மற்றும் கட்சிப் பிரமுகர்களது சிறப்புரைகள் இடம்பெற்றன. உரையாற்றியவர்கள் வரிசையில் விவசாய அமைப்புக்களது நெல்லியடி கிளைத் தலைவர் திரு.தம்பையா கனகராஐh, இளம் சட்டத்தரணி திரு.கனகரட்ணம் சுகாஸ், இளைப்பாறிய காணிப்பதிவாளர் திரு.சிற்றம்பலம் செல்வரட்ணம், வடக்கு மாகாண தெங்கு, பனை கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செயலாளர் திரு.லோறன்ஸ் லூயிஸ், பலாலி இடம்பெயர்ந்த மக்கள் அமைப்பைச் சேர்ந்த திரு.எஸ்.இருதயதாஸ், நெல்லியடி மக்கள் வங்கி கிளையின் முன்னாள் முகாமையாளர் திரு.ஆழ்வார் செல்லத்துiர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், சட்டத்தரணியுமாகிய திரு.விஸ்வலிங்கம் மணிவண்ணன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உப தலைவரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாகிய திரு.இராயப்பு எட்வேட் ஆனந்தராஐh, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பருத்தித்துறை நகரசபையின் முன்னாள் உறுப்பினருமாகிய திரு.வின்சன்ற் டீ போல், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உப தலைவியும், முன்னாளர் பாராளுமன்ற உறுப்பினருமாகிய திருமதி பத்மினி சிதம்பரநாதன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு.செல்வராசா கNஐந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு.கNஐந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் சிறப்புரைகளை நிகழ்த்தினர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் அவர்களால் மே தினப் பிரகடனம் வாசிக்கப்பட்டது.

இறுதியாக கட்சியின் இளைஞர் அணி தலைவர் திரு.இ.சத்தியசீலன் அவர்களது நன்றியுரையினைத் தொடர்ந்து கட்சிக் கொடிகள் இறக்கப்பட்டு நிகழ்வுகள் நிறைவு பெற்றது.

0 Responses to தமிழ் தேசிய மக்கள் முன்னணி – அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கூட்டு மே தினம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com