பாமக நிறுவனர் ராமதாஸ் ஏற்கனவே சில வழக்குகளில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் உள்ளார்.
இந்நிலையில் அவர் மீது மேலும் இரு வழக்குகள் போடப்பட்டு, அவரது காவலை வரும் 13ம் திகதி வரை நீட்டித்து உள்ளது நீதிமன்றம்.
கடந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவின் போது, வன்முறை மற்றும் கலவரத்தைத் தூண்டிய புகாரின் அடிப்படையிலும், மேலும் ஜாதிக் கலவரத்தை உண்டு பண்ணிய குற்றத்தின் பெயரிலும் என்று பல்வேறு வழக்குகளின் அடிபடையில் பாமக நிறுவனர் கைது செய்யப்பட்டு, அவர் மீது அத்தனை வழக்குகளும் பதிவாகியுள்ளது.
இந்த நேரத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்து, ஜாமீனுக்காக காத்திருந்த ராமதாஸ் மீது மேலும் இரண்டு புதிய வழக்குகளை பதிவு செய்துள்ளனர். தடையை மீறி கூடங்குளத்தினுள் நுழைந்தது, அங்கு இறையாண்மைக்கு எதிராக பேசியது உள்ளிட்ட 2 வழக்குகள் அவர் மீது புதிதாக சேர்ந்துள்ளது.
இந்த வழக்குகளின் அடிப்படையில் அவரின் காவல் வருகிற 13ம் திகதி வரை நீடிக்கிறது என்பதை, திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, ராமதாசை திருச்சி சிறையில் சென்று நேரில் பார்த்து தெரிவித்து விட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
0 Responses to பாமக நிறுவனர் ராமதாஸ் மீது மேலும் இரண்டு வழக்கில் காவல் நீடிப்பு !