Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்தேசத்தின் மீது கடந்த 65வருடங்களாக மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்கள பௌத்த தேச த்தின் திட்டமிட்ட இன அழிப்பின் தொடர்ச்சியே முஸ்லிம் மக்கள் மீதும், தற்போது அசாத் சாலி மீதும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மிக மோசமான நடவடிக்கைள் என தெரிவித்துள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அசாத்சாலி கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமது கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

அசாத்சாலி கைதுசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் இன்று மாலை முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் விளக்கமளிக்கையில், அசாத்சாலியின் அரசியல் நடவடிக்கைகளில் கடந்த ஒரு வருடகாலத்தில் பல மாற்றங்களை நாங்கள் அவதானித்திருக்கின்றோம். குறிப்பாக தமிழ்-முஸ்லிம் தேசங்களுக்கிடையில் இணக்கப்பாடு ஏற்படபவேண்டும், தமிழ்-முஸ்லிம் சமு கங்கள் இணைந்து செயற்படவேண்டும் என மிக தீவிரமாக செயற்பட்டவர் அசாத்சாலி. நாங்கள் அறிய எக்காரணம் கொண்டும், எந்தவொரு இடத்திலும் சிறீலங்கா அரசாங்கத்தை அவர் கேள்விக்குள்ளாக்கவில்லை. எனினும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் வெளியாகும் ஜீனியர் விகடன் ஊடகத்திற்கு அவர் வழங்கியிருந்த செவ்வியில் குறிப்பிட்டிருக்கையினில் முஸ்லிம் மக்கள் தமிழ் மக்கள் எந்த அடிப்படைகளுடன் கடந்தகாலங்களில் ஆயுதம் ஏந்திப் போராடினார்களோ அந்த அடிப்படைகளுடன் போராடவேண்டும். அந்தப் போராட்டம் தாமதப்படுவதற்கு காரணம் ஆயுதங்கள் கிடைக்கவில்லை என்பதே.

ஆயுதங்கள் கிடைத்தவுடன் அவர்கள் போராடுவார்கள் என்று குறிப்பிட்டதாக மேற்குறித்த ஊடகம் குறிப்பிட்டிருக்கின்றது. ஆனால் எமக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவல்களின் படி அந்த செவ்வி வெளியானவுடன் தன்னுடைய பெயரில் வெளியாகியிருக்கும் குறித்த செவ்வி பிழையானது எனவும் அதில் திருத்தங்கள் ஏற்படுத்தப்படவேண்டும் எனவும் அசாத்சாலி ஜீனியர் விகடனுக்கு பதில் எழுதியிருந்ததாக அறிய முடிகின்றது.

இந்நிலையிலேயே குறித்த செவ்வியை காரணம் காட்டி, விசாரணை என்ற பெயரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அசாத்சாலி கைதுசெய்யப்பட்டிருக்கின்றார். இதனை தமிழ்தேசிய மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது. அவருடைய கருத்துக்கள் நிச்சயமாக இனவாதத்தை தூண்டும் வகையில் அமைந்திருக்கவில்லை. அந்த ஊடகத்தில் வெளியான தகவல்கள் உன்மையல்ல என்பது ஒருபுறமிருக்க அது உண்மையாக இருந்திருந்தால் இந்த இடத்தில் அசாத் சாலி ஏன் அவ்வாறு பேசினார் என்ற கேள்வியொன்று எழுப்பப்படவேண்டும். அசாத் சாலி கடந்த காலங்களில் ஜ.தே.கட்சியுடனும், அரசாங்கத்துடனும் இணைந்து இலங்கையர் என்ற அடிப்படையில் செயற்பட்டவர். எனவே ஏன் அவர் இவ்வாறு பேசுகின்றார் என்று அனைவரும் சிந்திக்கவேண்டும். அதற்காக அவரை பயங்கரவாதி என அடையாளப்படுத்தி கைதுசெய்வது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

எம்மைப் பொறுத்தவரையில் அசாத்சாலி கைது, அல்லது அண்மைக்காலமாக முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சம்பவங்கள் கடந்த 65வருடங்களாக தமிழ்தேசத்தை இல்லாதொழிப்பதற்கு மேற்கொள்ளப்படும் சம்பவங்களின் தொடர்ச்சியாகும். இதனை நாம் பிரித்துப் பார்க்க் தயாராக இல்லை. சிங்கள பௌத்த தேசியவாதத்தை பொறுத்தவரை முழு இலங்கையும், சிங்கள பௌத்த தேசமாக இருக்கவேண்டுமே தவிர,  வேறு எந்த தரப்புக்களும் எந்தவொரு இடத்திலும் உரிமைகோர முடியாது என்பதே அவர்களுடைய திட்டம். இதற்கு முதலாவது எதிர்ப்பு தமிழ்தேசம், இரண்டாவது எதிர்ப்பு முஸ்லிம்தேசம் இன்று முஸ்லிம் தேசத்தை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டம் உச்சக்கட்டத்தை அடைந்து தடைகள் இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சிங்கள பௌத்த தேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு இடையூறு இல்லையென்ற நிலையில் சிங்கள பௌத்த தேசத்தின் நிகழ்ச்சி நிரல் தமிழ்தேசத்தை தாண்டி இப்போது  முஸ்லிம் தேசத்தை அழிக்க நகர்த்தப்பட்டிருக்கின்றது. சிங்கள தேசத்துடன், தமிழ்தேசம், முஸ்லிம் தேசம், மலையக மக்களுடைய தேசம் அனைவரும் இணைந்து சமாதானமாக வாழ்வதற்கு அந்தந்த தேசங்களுடைய அங்கீகாரம் பெறப்பட்ட நிலையில் புரிந்துணர்வை ஏற்படுத்தி உருவாக்கப்படும் நாடு என்ற அடிப்படையிலேயே இந்த நாட்டில் சிங்கள பௌத்த மக்கள் மட்டுமல்லாமல், ஏனைய மக்களும், அல்லது தேசங்களும் நின்மதியானதும், பாதுகாப்பானதுமான வாழ்வை எதிர்பார்க்க முடியும்.

அண்மைக்காலமாக அசாத்சாலியின் குரல் மற்றும் அவரது நடவடிக்கைள் வரவே ற்கத்தக்கதாக உள்ளது. முஸ்லிம் தேசத்திற்கும் பாதுகாப்பை நிரந்தரமாக ஏற்படுத்தும் வiயில் அவரது செயற்பாடுகள் அமையவேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பாகும். அப்போது அசாத் சாலிக்கும், அவரது கட்சிக்;கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி தமது முழுமையான ஆதரவினை வழங்கும். முதலில் தமிழ்-முஸ்லிம் மக்களுக்கிடையில் ஒரு புரிந்துணர்வு வரவேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். அந்தப் புரிந்துணர்வு தமிழ்-முஸ்லிம் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் ஏற்பட்டுவிடக்கூடாது. அவ்வாறு ஏற்பட்டால் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் ஒன்றாக திரண்டாலும் சிங்கள பௌத்த மக்களின் எண்ணிக்;கை அடிப்படையிலான பெரும்பான்மைக்கு சமத்துவப்பட முடியாது.

அதனை நாங்கள் நன்றாகவே அறிந்திருக்கின்றோம். தமிழர்களைப் பொறுத்தவரையில் நாம் ஒரு போதும் சிறுபான்மையினர் அல்ல. சரித்திர ரீதியாக எமக்கு ஒரு தேசம் என்ற அந்தஸ்த்தும், அங்கீகாரமும் காலணித்துவ ஆட்சிக்கு முன்னர் இருந்தது. பிரித்தானியர் ஆட்சியின்போதே எங்கள் தேசம் என்ற அந்தஸ்த்து பறிக்கப்பட்டு, அங்கீகாரம் அழிக்கப்பட்டு நாங்கள் அடிமைகளாக்கப்பட் டோம்.

எண்ணிக்கை அடிப்படையில் நாம் குறைந்திருந்தாலும், தேசங்கள் என்ற அடிப்படையில் நாங்கள் சமத்துவம் பேணும் திர்வொன்றினை எதிர்பார்க்கிறோம். அந்த ஒரு தீர்வே சிங்கள தேசம் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக உள்ளபோது தமிழ்தேசத்தையும் அழிக்கும் செயற்பாடுகளை முறியடிப்பதற்கான ஒரே வழி, தேசத்திற்கென்று நாம் முன்வைக்கும் கொள்கை தமிழர்களுக்கு மட்டு மல்லாமல்;, முஸ்லிம்களும், மலையக மக்களும், உணர்ந்துகொள்ளாதவரையில் அசாத்சாலி போன்ற பலரின் கைதுகளையும், முஸ்லிம்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களையும் ஒருபோதும் தடுக்க முடியாது என்றார்.

இப்பத்திரிகையாளர் சந்திப்பினில் கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் சர்வதேச அமைப்பாளர் விசுவலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

0 Responses to தமிழ் தேசத்தின் மீதான அழிப்பின் தொடர்ச்சியே முஸ்லீம்கள் மீதான வன்முறையும்- தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com