மக்கள் டிவியை தடை செய்ய வேண்டும் என்று சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார் மனு அளித்தனர்.
மகாபலிபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற்ற சித்திரை விழாவின் போது, மரக்காணத்தில் கலவரம் நடைபெற்றது. கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றதாக பாமக நிறுவனர் ராமதாஸ், கடந்த ஆண்டு நடந்த கூட்டத்தை தாமதமாக முடித்ததாக அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமகவின் முக்கிய தலைவர்கள் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த
நிலையில் மக்கள் டிவி மீதும் அன்புமணி ராமதாஸ் மீதும் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் விடுதலை
சிறுத்தைகள் கட்சியின் வழக்குரைஞர்கள் இரண்டு மனுக்களை அளித்தனர்.
அந்த
மனுவில், ‘’பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவங்கள், சாலைகளில் மரங்களை
போடுவது போன்ற சம்பவங்களில் பாமகவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆனால் பாமகவினர் செய்யும் வன்முறை சம்பவங்களை விடுதலை சிறுத்தைகள்
கட்சியினர் செய்வதாக அவதூறு பரப்புகின்றனர்.
0 Responses to மக்கள் டிவியை தடை செய்ய டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு