Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழம் வருடம் தோறும் நடாத்தி வரும் தாயக விடுதலை பாடல் போட்டியான சங்கொலி விருது 2013 ற்கான தெரிவுப்போட்டி இன்று காலை 10.00 மணிக்கு பிரான்சின் புறநகர் பகுதிகளில் ஒன்றான நந்தியார் தமிழ்ச்சோலை மண்டபத்தில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக ஈகைச்சுடரினை கிளைப்பொறுப்பாளர் திரு. பார்த்தின் ஏற்றிவைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தெரிவுப்போட்டிக்கான நடுவர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

தமிழ்நாடு கர்நாடக சங்கீத சிறப்புப்பட்டதாரியும், சங்கீத ஆசிரியருமான திருமதி சுதர்சனி அவர்களும், ஒவையார் நாடகப்புகழ் கலைஞரும், பாடகரும்,வில்லிசைக்கலைஞரும், நடிகரும், ரிரிஎன் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளருமாகிய திரு. கணேசு தம்பையா அவர்களும், மிருதங்க ஆசிரியரும், பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கழகப்பொறுப்பாளருமாகிய திரு. சுதர்சன் அவர்களும் ஆற்றியிருந்தனர்.

ஒவ்வொரு பிரிவுகளிலும் ஆறு பேர் என்கின்ற ரீதியில் தெரிவு செய்யப்பட்டிருந்தனர் அவர்களின் பிரிவுகளும், பெயர்களும் பின்வருமாறு:

கீழ்ப்பிரிவு
 சுரேஸ்குமார் சாகித்தியன்
சுரோஸ்குமார் சங்கீதன்
சிறிரங்கன் கரிணி
சிவரூபன் எழிலினி
குணரூபன் கயதுர்க்கா
தெய்வேந்திரம் கரிகரிணி

மத்திய பிரிவு
மோகனதாஸ் கபிலன்
ஆனந்தரூபன் சாருகி
விஐயகுமார் யாழினி
கணேசமூர்த்தி அபிநயா
எட்வேட் லூயிஸ் இலக்கியா
சதீஸ் சிறித்திக்

மேற்பிரிவு
எட்வேட் லூயிஸ் அநோஐpனி
சோதிராசா சோனா
மோகனதாஸ் அகிம்சா
திலீப்குமார் திசானிகா
இராசலிங்கம் சுவேதன்
ஆனந்தரூபன் சுருதிகா

அதிமேற்பிரிவு
கோகுலதாஸ் சூரியா
கோகுலதாஸ் வித்தியா
திலீப்குமார் தானுகா
nஐயதாசன் nஐருசா
முருகதாசன் குமுதினி
முருகதாசன் உசாந்தினி

அதிஅதி மேற்பிரிவு
இராசலிங்கம் றொசான்
இராசலிங்கம் ஐசிந்தன்
ஞானசூரியா துசித்தா
செல்வராசா நிருசன்

சிறப்புப்பிரிவு
மருசலீன் தயதாஸன்
ஆறுமுகம் கோவிந்தராசா
கைதாம்பிள்ளை மரியசீலன்
தயாளன் றதி
நா. செல்வக்குமாரன்
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான இறுதிப்போட்டி எதிர்வரும் 26.05.2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெவுள்ளது.












0 Responses to சங்கொலி 2013 விருதுக்கான தெரிவுப்போட்டி பிரான்சு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com