தாங்கள் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்து இருப்பது தங்களுக்கு, மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், நிரந்தரமாக எங்களைத் தேமுதிகவில் இருந்து நீக்கிவிட்டால் இன்னமும் மகிழ்ச்சி அடைவோம் என்றும் தேமுதிகவின் அதிருப்தி எம் எல் ஏக்கள் 7 பேரும் கூறியுள்ளனர்.
தேமுதிகவின் அதிருப்தி எம் எல் ஏக்களான பாண்டியராஜன், அருண்பாண்டியன், தமிழழகன், மைக்கேல் ராயப்பன், சுந்தரராஜன், சுரேஷ் குமார், சாந்தி ஆகிய 7 பேரும், டெல்லி மேல்சபைத் தேர்தலில் தேமுதிக வேட்பாளருக்கு வாக்களிக்காமல் அதிமுகவிற்கு வாக்களித்தனர்.
இதில் கோபமடைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், இந்த 7 பேரையும் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்படும் என்றும், இவர்கள் 10 நாட்களுக்குள் மாற்றி வாக்களித்ததற்கான விளக்கத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் அறிக்கை விடுத்து இருந்தார். இதற்கு பதலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள 7 எம் எல் ஏக்களும், தற்காலிகமாக தேமுதிகவில் இருந்து நீக்கியதே எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
எனவே நிரந்தரமாக எங்களை கட்சியை விட்டு நீக்கினால், மிகவும் சந்தோஷமடைவோம்., என்று கூறியுள்ளனர். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து எங்களை நீக்கிவிட வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம் என்றும் கூறியுள்ளார்கள்.
0 Responses to தற்காலிக நீக்கம் மகிழ்ச்சி அளிக்கிறது, நிரந்தரமாக நீக்கிவிடுங்கள்!: விஜயகாந்துக்கு அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பதிலடி!