Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக மலேசியா அறிவித்துள்ளது.
தன்சானியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அங்கு நடைபெற்ற மாநாடொன்றில் கலந்து கொள்ளும் நோக்கில் சென்றிருந்த மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ மொஹமட் நிஜாப் நேற்று சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். இதன் போதே, இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாடுகளுக்கான ஒத்துழைப்பை வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார்.

மோதல்களுக்குப் பின்னர் இலங்கையின் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து நேரில் கண்டறிய வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ மொஹமட் நிஜாப்பை அழைத்துள்ளார். இதன் போது பதிலளித்துள்ள மலேசியப் பிரதமர், 'தூரத்திலிருந்து தீர்ப்புக்களை வழங்காமல் நேரடியாக விடயங்களை ஆராய்வதே சிறந்தது.' அதன் பொருட்டும் நிச்சயமாக பொதுநலவாய மாநாடுகளில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளார்.

0 Responses to இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பு:மலேசியா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com