தமிழகத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இரண்டு இலன்கை ராணுவ அதிகாரிகளுக்கும், ராணுவ பயிற்சி அளிக்கும் வேலையை தற்போது பாகிஸ்தான் ராணுவ பயிற்சி அதிகாரி மேற்கொள்ள இருப்பதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் உள்ள குன்னூர்ரில் ராணுவ பயிற்சி முகாம் உள்ளது. இங்கு கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக பயிற்சி பெற்றுவந்த இலங்கை ராணுவ அதிகாரிகள் இரண்டு பேரைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று, தமிழகத்தில் பலமான எதிர்ப்புக் குரல்கள் கிளம்பின. பல போராட்டங்களும் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் மத்திய அரசு இரண்டு இலங்கை ராணுவ அதிகாரிகளையும் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமில் இருந்து திருப்பி அனுப்பி விட்டது. உடனடியாக பாகிஸ்தானில் ராணுவத் தளபதி அஸ்பக் பர்வேஸ் கயானியை, இலங்கை ராணுவ கமாண்டர் ஜெனரல் ஜகத் ஜெயசூரியா சந்தித்து, இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும்படி கேட்டுக் கொண்டதாகத் தெரிய வருகிறது.
இதை அடுத்து, இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிக்க கயானி இலங்கை செல்லவுள்ளார் என்றும் தெரிய வருகிறது.
0 Responses to வெலிங்டனில் இருந்து திரும்பி போன இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறது பாகிஸ்தான்!