Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யேர்மனியின் டோர்ட்முன்ட் நகரில் தமிழர் விளையாட்டு விழா - 2013,  கடந்த 20.07.2013 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது. காலை 08:15 மணியளவில் ஈகைத்தீபம் பரமேஸ்வரி அவர்களின் கணவரும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளருமாகிய திரு.கந்தராசா அவர்கள்  பொதுச்சுடரை ஏற்றிவைத்து நிகழ்வை ஆரம்பித்துவைக்க,  தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் அவர்களால் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. மெய்வல்லுனர் போட்டிகள், சிறுவர்களுக்கான போட்டிகள், துடுப்பாட்டம், உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், கிளித்தட்டு, போன்ற  விறுவிறுப்பான விளையாட்டுக்களும், முட்டி உடைத்தல், சங்கீதக்கதிரை போன்ற  சுவாரசிய விளையாட்டுக்களும் நடைபெற்றன.

 சுவிஸ்,  பிரான்ஸ், ஒல்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும் விளையாட்டு வீரர்கள் வந்து போட்டியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மாலை 20:00 மணியளவில் வெற்றிபெற்றவர்களுக்கான மதிப்பளிப்பு நடைபெற்றது, அதனைத்தொடர்ந்து தேசியக்கொடி இறக்கிவைக்கப்பட்டு , 22:00 மணியளவில் நிகழ்வுகள்  நிறைவுபெற்றன.





































0 Responses to யேர்மனி - டோர்ட்முன்ட் நகரில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா - 2013 (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com