Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நடிகர் விஜயகுமாரின் மனைவியும், பிரபல நடிகையுமான மஞ்சுளா (59) இன்று திடீர் மரணமடைந்தார்.

நடிகை மஞ்சுளா தனது கணவரும், நடிகருமான விஜயகுமாருடன் சென்னையை அடுத்து உள்ள ஆலப்பாக்கத்தில் வசித்து வந்தார்.

அவர் படுக்கை அறையில் இருந்த கட்டிலிலிருந்து திடீர் என்று கீழே விழுந்ததில், கட்டிலின் கால் அவறுடைய வயிற்றில் குத்தியுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்துள்ளார்.

அவரது மரணம் குறித்து தகவல் அறிந்த திரையுலகினர் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் மஞ்சுளாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.



0 Responses to நடிகை மஞ்சுளா விஜயகுமார் திடீர் மரணம்! (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com