இந்தோனேசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு சென்ற அகதிகள் படகொன்று இன்று விபத்திற்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த படகினில் சுமார் இருநூறிற்கும் மேற்பட்ட அகதிகள் புறப்பட்டு
சென்றிருந்ததாகவும் அவர்களுள் 150 இற்கும் மேற்பட்டவர்கள் இலங்கை தமிழ்
அகதிகள் என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.குறிப்பாக
குறித்த படகினில் பயணித்தவர்களது 28 வரையிலான சிறு குழந்தைகளது நிலை
பரிதாபகரமாகவே இருந்து வருகின்றது.
எனினும் இந்தோனேசிய மீனவர்களது படகுகள் சுமார் 30 இற்கும் மேற்பட்டவை மீட்பு நடவடிக்கைகளினில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.சிலர் நீந்தி கரை வந்து சேர்ந்து வழங்கிய தகவல்களையடுத்தே மூழ்கிய படகு பற்றிய தகவல்கள் கிடைத்து மீட்பு பணிகள் தொடங்கியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையினில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சித்திரவதைகள் மற்றும் இராணுவ அச்சமூட்டல்களையடுத்து அச்சங்கொண்டுள்ள தமிழ் மக்கள் இந்தோனேசியா வரை விமான மூலம் பயணித்து பின்னர் அங்கிருந்து அவுஸ்திரேலியாவிற்கு படகுகள் மூலம் பயணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to மூழ்குகின்றது அகதிகள் கப்பல்! 28 இற்குமதிகமா இலங்கை குழந்தைகள் பற்றி தகவலில்லை!