Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தருமபுரியில் இளவரசனை காதல் செய்து கலப்புத் திருமணம் செய்து கொண்ட திவ்யாவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம், சிறப்பு கவுன்சிலிங் கொடுக்க உத்தரவிட்டு இருந்தது.

திவ்யாவுக்கு இரண்டு நாட்களாக 4  மணி நேரம் கொடுத்த கவுன்சிலிங் அறிக்கையை, மன நல மருத்துவர்கள் நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்.

தருமபுரியில் காதல் செய்து கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் இளவரசன்-திவ்யா தம்பதியர். இவர்களது கலப்புத் திருமணத்தை அவமானமாக கருதிய திவ்யாவின் தந்தை, அடுத்த மாதமே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் திருமணமாகி 8 மாதங்களுக்குப் பிறகு, தாயைப் பார்க்க வந்த திவ்யா, சென்னை உயர் நீதிமன்றத்தில், தனக்கு தாயுடனே செல்ல விருப்பம் என்றும், இளவரசனுடன் வாழ விருப்பமில்லை என்றும் தெரிவித்தார்.

இதற்கு அடுத்த  நாளே,இளவரசன் தருமபுரி ரயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்  என்றும், மனமுடைந்த நிலையில் இளவரசன் தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது. தந்தையின் பேரிழப்பு, இளவரசன் மரணம் என்று மன ரீதியாக பாதிப்பில் இருக்கும்   திவ்யாவுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

அதன் படி, திவ்யா, அவரது தாயார், திவ்யாவின் தம்பி  ஆகியோருக்கு கடந்த இரண்டு நாட்களாக 4 மணி நேரம் கவுன்சிலிங் வழங்கப்பட்டது என்றும், இந்த கவுன்சிலிங் தங்களுக்கு போதுமானது என்று மூவரும்  கூறி விட்டதால், இந்த கவுன்சிலிங் தொடர்பான அறிக்கையை மருத்துவ நிபுணர்கள் நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்.

இளவரசன் தந்தை, மற்றும் தாய் இருவரும் தங்களுக்கு கவுன்சிலிங் தேவையில்லை என்று கூறி மறுத்து வந்ததால், இவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to தருமபுரி திவ்யாவின் கவுன்சிலிங் அறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை தாக்கல் : மன நல நிபுணர்கள் தகவல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com