Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஸ்பெயினில் இன்று அதிகாலை இடம்பெற்ற பாரிய் ரயில் விபத்து ஒன்றில் 77 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 100 க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
வட மேற்கு ஸ்பெயினின் சாண்டியாயோ தெ கொம்பெஸ்டாலா நகரின் அருகே இந்த ரயில் தடம்புரண்டுள்ளது.

மேட்ரிட்டிலிருந்து ஃபெரொல் சென்று கொண்டிருந்த குறித்த ரயிலில் 218 பயணிகள் இருந்தனர். விபத்து ஏற்பட்ட போது அதன் 8 பெட்டிகளுமே தடம்புரண்டுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வளைவொன்றில் வரவேண்டிய வேகத்தை விட இரு மடங்கு வேகத்தில் வந்ததால் தண்டவாளத்தை விட்டு ரயில் விலகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஸ்பெயினில் கடந்த 40 வருடங்களில் ஏற்பட்ட மிக மோசமான ரயில் விபத்தாகவும் இது பதிவாகியுள்ளது.

0 Responses to ஸ்பெயினில் பாரிய ரயில் விபத்து : 77 பேர் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com