வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில்
முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்
தேர்ந்தெடுக்கப்பட்டமையானது பங்காளிக்கட்சிகளுக்கிடையில் எடுக்கப்பட்ட
ஒருமித்த தீர்மானம்.
அதில், வேறு உள்நாட்டு சக்திகளோ- வெளிநாட்டு சக்திகளோ தாக்கம் செலுத்தவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
‘அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை பாதுகாப்போம்’ என்கிற அமைப்பு கொழும்பில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.
வடக்கு மாகாண சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுவிடும் என்கிற நிலையில் அதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று முனைகின்ற சக்திகள் நீதிமன்றத்தினூடு அவற்றை செய்ய எத்தனிக்கின்றன. இது, முறையற்ற செயற்பாடு என்றும் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தில் எதுவுமே இல்லை. ஆயினும், அதனை அடிப்படையாக வைத்துக் கொண்டு அர்த்தமுள்ள அதிகாரப்பரவலாக்கத்தைச் செய்ய முடியும். ஆனால், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் எப்படியாவது 13வது திருத்த சட்டத்தை நீக்கிவிட வேண்டும் என்கிற முயற்சிகளிலேயே ஈடுபட்டுள்ளது. இது, நாட்டை மீண்டும் மீண்டும் பின்நோக்கி கொண்டு செல்லும் எண்ணப்பாடாகும். அவ்வாறான செயற்பாடுகள் அர்த்தமற்றது என்றார்.
வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டமையானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏகமான முடிவு. அதில் வெளிநாட்டு சக்திகளில் தலையீடு இருக்கிறது அல்லது உள்நாட்டு சக்திகள் தாக்கம் செலுத்துகின்றன என்கிற கருத்துக்களில் சிறிதளவேனும் உண்மையில்லை என்று எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

0 Responses to சி.வி.விக்னேஸ்வரனின் தெரிவில் அழுத்தங்கள் இருக்கவில்லை: எம்.ஏ.சுமந்திரன்