ஈகைத்தீபம் மதிப்பளிப்பு
திருமதி.பரமேஸ்வரி கந்தராசா
தேச விடுதலையின் உணர்வுத் தீபமொன்று
அணைந்துவிட்டது. மூச்சிலும்,பேச்சிலும், செயலிலும் மண்பற்றின் எழுச்சியோடு
துடித்த இதயம், தன் சத்தத்தை நிறுத்திக்கொண்டது. இறப்பும்,பிறப்பும்
இயற்கையின் மாற்றமுடியாத நியதி என்பது விதியாகும். திருமதி. பரமேஸ்வரி
கந்தராசா அவர்களின் மறைவு எமது இதயங்களில் துயர இரத்தத்தை பாய்ச்சுகின்றது.
தழிழீழ விடுதலையின் மீட்புக்காய் இறுதி மூச்சுவரை செயற்பட்ட ஓர் உன்னதச்
செயற்பாட்டாளரை இழந்துவிட்டோம்.
கம் நகரத்தின் தமிழாலய நிர்வாகியாக
இறுதிமூச்சுவரை பணியாற்றி, இனத்தின் உயிரான தமிழ் மொழியை, எதிர்காலச்
சந்ததியின் உணர்வில் பதியம் வைத்து தாய்மொழிப்பற்றாளராகத் திகழ்ந்தார்.
தமிழ்ப் பெண்கள் அமைப்பின் செயற்பாடுகளில் தன்னை இணைத்து புரட்சி பொங்கும்
செயற்திட்டங்களில் உறுதிபூண்டு செயலாற்றிய புரட்சிப் பெண்ணாக மிளிர்ந்தார்.
அத்தோடு தமிழீழ விடுதலைச் செயற்பாட்டின் அனைத்து அங்கங்களிலும் தன்னை
அர்ப்பணித்து ஓர் உன்னதமான ஊக்கசக்தியாக ஒளிர்ந்த செயற்பாட்டாளரை ஈகைத்தீபம் என மதிப்பளிக்கின்றோம்.
ஈகைத்தீபம் திருமதி. பரமேஸ்வரி கந்தராசா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்க்கும், எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.
தமிழரின் தாகம் தழிழீழத் தாயகம்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
யேர்மனிக்கிளை
0 Responses to ஈகைத்தீபம் மதிப்பளிப்பு திருமதி.பரமேஸ்வரி கந்தராசா