Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய பங்காளிக் கட்சிகளுக்கிடையில் வேட்பாளர் பங்கீடை இறுதி செய்து விபரங்களை வெளியிட்டுள்ளது.
தொடர்ந்தும் இழுபறியில் இருந்து வந்த யாழ் மாவட்டத்துக்கான வேட்பாளர் பங்கீடு பட்டியலும் நேற்று திங்கட்கிழமையுடன் இறுதி செய்யப்பட்டது.

தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் நேற்றுக் கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நியமனக்குழுவே வேட்பாளர் பங்கீடு பட்டியலை இறுதி செய்து வெளியிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளரான சி.வி.விக்னேஸ்வரன் யாழ் தேர்தல் மாவட்டத்திலிருந்து போட்டியிடவுள்ளார்.

வெளியிடப்பட்டுள்ள கட்சிகளுக்கிடையிலான வேட்பாளர் பங்கீட்டு விபரம்.

யாழ்ப்பாணம்

தமிழரசுக் கட்சி 7

தமிழர் விடுதலைக் கூட்டணி 2

ரெலோ 3

ஈ.பி.ஆர்.எல்.எப் 4

புளொட் 2


கிளிநொச்சி

தமிழரசுக் கட்சி 3

தமிழர் விடுதலைக் கூட்டணி 2

ரெலோ 1

ஈ.பி.ஆர்.எல்.எப் 1


முல்லைத்தீவு

தமிழரசுக் கட்சி 2

தமிழர் விடுதலைக் கூட்டணி 1

ரெலோ 2

ஈ.பி.ஆர்.எல்.எப் 2

புளோட் 1

வவுனியா

தமிழரசுக் கட்சி 2

தமிழர் விடுதலைக் கூட்டணி 1

ரெலோ 2

ஈ.பி.ஆர்.எல்.எப் 2

புளோட் 2

 மன்னார்

தமிழரசுக் கட்சி 2

ரெலோ 3

ஈ.பி.ஆர்.எல்.எப் 2

புளோட் 1


இதனிடையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சிகளுக்கிடையில் வேட்பாளர் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தங்களது வேட்பாளர்களாக யாரை முன்னிறுத்துவது என்று அந்தந்தக் கட்சிகள் ஆராய்வுகளை மேற்கொண்டுள்ளன. வெகு விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் பெயர் விபரங்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா என்கிற ஐந்து மாவட்டங்கள் நிர்வாக அடிப்படையில் உள்ளன. ஆனாலும், தேர்தல் மாவட்டங்களாக யாழ்ப்பாணமும், வன்னியும் பதிவு செய்யப்பட்டுள்ளன. யாழ் தேர்தல் மாவட்டத்தில் யாழ்ப்பாணமும்- கிளிநொச்சியும் உள்ளடங்குகின்றன. வன்னி தேர்தல் மாவட்டத்தில் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகியன உள்ளடங்குகின்றன.

0 Responses to கூட்டமைப்பின் வேட்பாளர் பங்கீடு பட்டியல் இறுதி செய்யப்பட்டது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com