தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹன்சி குரோனி மீது
டெல்லி காவல்துறையினரால் சூதாட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2000ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - தென் ஆபிரிக்க போட்டியின் போது இவர் ரூ.1.20 கோடி சூதாட்டம் செய்ததாகவும் இதற்காக லண்டனை சேர்ந்த புக்கீஸ் சஞ்சீவ் சாவ்லாவிற்கு ரூ.60 இலட்சம் வீதம் இரு முறை சூதாட்டப் பணத்தை வழங்கியதாகவும் டெல்லி பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சுமார் 13 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. ஹன்சி குரோனி தற்போது உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 2002 ம் ஆண்டு விமான விபத்து ஒன்றில் உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில் குரோனியை தவிர வேறு கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் குறித்த குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படவில்லை. எனினும் வெளிநாட்டு சூதாட்டக் காரர்களான சஞ்சய் சாவ்லா மற்றும் மன்மோகன் கத்தார், தில்லியை சேர்ந்த சூதாட்டக் காரர்களான ராஜேஷ் கல்ரா மற்றும் சுனில் தத்கா, டி-சீரிஸ் உரிமையாளர்கள் குல்ஷன் குஷோர் மற்றும் அவரது சகோதரர் கிஹன் குமார் ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
2000-ம் ஆண்டு கிரிக்கெட் தொடரின் போது லண்டனில் உள்ள சூதாட்டக் காரர்களுடன் குரோனி பேசியதை டெல்லி பொலிஸின் புலனாய்வு கண்டு பிடித்தது. இதை குரோனியே முன்னர் மறுத்திருந்த போதும் தென் ஆபிரிக்க கிரிக்கெட் வாரியம் 2001 இல் அவர் மீதான குற்றச்சாட்டுக்களை உறுதி செய்து விளையாடுவதற்கு ஆயுள் தடை விதித்தது.
முன்னதாக சாஞ்சய் சாவ்லா லண்டனில் தங்கியிருந்த ஹோட்டல் அறை ஒன்றுக்கு குரோனி வெறும் கையுடன் சென்று அறையைவிட்டு வெளிவரும் போது பணப்பையுட்ன வந்ததாக நேரில் பார்த்த சாட்சியாளர் ஒருவர் கூறியிருந்ததை அடுத்து குரோனியே, சஞ்சய் சாவ்லா இடையேயான தொடர்பு உறுதி செய்யப்பட்டது.

0 Responses to தென் ஆபிரிக்க முன்னாள் கேப்டன் ஹேன்சி குரோனியே ரூ1.20 கோடி சூதாட்டம்? : டெல்லி காவல்துறை வழக்கு