அமெரிக்காவினால் தேடப்பட்டு வரும் முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரி எட்வார்ட் ஸ்னோவ்டெனுக்கு வெனிசுலா, நிகாராகுவா ஆகிய இரு நாடுகளும் அகதி அந்தஸ்து வழங்க முன்வந்துள்ளன.
வெனிசுலா அதிபர் நிகோலாஸ் மடுரோ, வெனிசுலா சுதந்திர தினத்தன்று பேசிய உரையில், வெனிசுலாவின் பொலிவாரியன் குடியரசின் தலைவர் என்ற முறையில் இளம் அமெரிக்கச சிட்டிசன் எட்வார்ட் ஸ்னோவ்டன், அவரது தந்தை நடான வெனிசுலாவுக்கு வந்து தங்குவதற்கு அனுமதி அளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
நிகாராகுவா அதிபர் தெரிவிக்கையில், காரண காரியங்கள் அனுமதி அளிக்கும் பட்சத்தில் ஸ்னோவ்டனுக்கு அகதி அந்தஸ்து கொடுப்பதில் மிக மகிழ்வடைகிறோம். நாங்கள் அகதி அந்தஸ்து கொடுப்பது தொடர்பில் திறந்த கௌரவமான நடத்தையை கொண்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை பொலிவியாவும் ஸ்னோவடனுக்கு அகதி அந்தஸ்து வழங்கும் வாய்ப்பைக் கொடுப்பது தொடர்பில் ஆலோசித்து வருகிறது. அண்மையில் பொலிவிய விமானத்தில் அந்நாட்டு அதிர் ரஷ்யாவிலிருந்து வந்து கொன்டிருந்த போது பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் குறித்த விமானம் தமது நாடுகளில் தரையிறங்குவதற்கு திடீர் அனுமதி மறுத்திருந்ததன.
ஸ்னோவ்டன் குறித்த விமானத்தில் மறைந்திருக்கிறார் என யாரோ ஒருவர் கதை கட்டிவிட்டதால் வந்த வினையிது. பின்னர் ஆஸ்திரேலியாவில் தரையிறக்கப்பட்ட பொலிவிய அதிபரின் விமானம் மீண்டும் தனது நாட்டுக்கு மிகத் தாமதமாக சென்றடைந்தது. பின்னர் இச்சம்பவம் தொடர்பில் பொலிவிய அதிபர் தனது கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்ததுடன், அமெரிக்காவின் பேச்சைக் கேட்டு ஐரோப்பிய நாடுகள் இப்படி நடந்து கொண்டன எனச் சாடியிருந்தார். இந்நிலையிலேயே இதற்கு பதிலடியாக ஸ்னோவ்டனுக்கு அகதி அந்தஸ்து வழங்குவது தொடர்பில் பொலிவியா யோசித்து வருகிறது.
இதேவேளை ஸ்னோவ்டன் மேலும் 6 நாடுகளுக்கு புகலிடக் கோரிக்கை விடுத்துள்ளதாக விக்கிலீக்ஸ் டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் இம்முறை அவை எந்தெந்த நாடுகள் எனக் குறிப்பிடவில்லை. அமெரிக்காவின் தலையீடு இருக்கும் என்பதனால் இவ்வாறு இரகசியம் காக்கப்படுவதாக தெரிவித்திருந்தது.
முன்னதாக ஸ்னோவ்டன், இந்தியா, சீனா உட்பட 21 நாடுகளிடம் வெளிப்படையாக அகதி அந்தஸ்து கேட்டிருந்ததும் அதில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அவருக்கு அகதி அந்தஸ்து வழங்கு மறுப்பு தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
0 Responses to ஸ்னோவ்டனுக்கு அகதி அந்தஸ்து வழங்க முன்வந்துள்ளன இரு நாடுகள்