தேசியப் பிரச்சினைகளுக்கான தீர்வு திட்டங்கள் பற்றிய கலந்துரையாடல்களுக்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கை வரவுள்ளார்.
இலங்கை அரசாங்கம் 13வது திருத்த சட்டத்தில் மாற்றங்களை செய்ய எத்தனித்துள்ள தருணத்தில் அதற்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சல்மான் குர்ஷித்தின் வருகை அவதானத்துடன் நோக்கப்படுகிறது.
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான வெளிவிவகார விடயங்கள் மற்றும் இலங்கையின் உள்நாட்டு அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் அவரின் வருகையின் போது ஆராயப்படும் என்று தெரிகிறது.
13வது திருத்த சட்டத்தில் செய்யப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில் இந்தியாவுக்கு விளக்கமளிப்பதற்காக புதுடில்லிக்கு பயணத்தை மேற்கொண்டிருந்த பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் முயற்சிகள் பெரியளவில் வெற்றிபெறவில்லை. இந்தநிலையில், சல்மான் குர்ஷித்தின் இலங்கை வருகை இன்னும் அழுத்தங்களை வழங்கும் என்று தெரிகிறது.
0 Responses to இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கை வருகிறார்