விவாகரத்தின் போது கணவரின் பரம்பரை சொத்தில் பெண்களுக்கு இழப்பீடு வழங்கும் யோசனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
திருமண சட்ட திருத்த மசோதாவை பெண்களுக்கு சாதகமானதாக மாற்றி பரிசீலிக்க ஏ கே அந்தோணி தலைமையில், மத்திய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. விவாகரத்தின் போது கணவரின் சொந்த சம்பாத்தியத்தில், பெண்களுக்கு பங்கு வழங்க வேண்டும் என்று இருந்தது.
அதே சமயத்தில் கணவரின் பரம்பரை சொத்தில் பெண்களுக்கு பங்கு அளிப்பது பற்றிய 13 எப் என்கிற புதிய விதிமுறை குறித்து மத்திய அமைச்சரவை நேற்று ஆலோசனை நடத்தியது. மேலும், பரஸ்பர விருப்பத்துடன் விவாகரத்து மனுத் தாக்கல் செய்தா கணவன்- மனைவி இருவரில் யாராவது ஒருவர் சம்பாதிக்காவிட்டால், நீதிபதி விருப்ப உரிமையை கருத்தில் கொண்டு விவாகரத்து வழங்கலாமா என்பது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது.
பரஸ்பர விருப்பத்துடன் விவாகரத்துக்கு அப்ளை செய்த ஜோடிகள், 6 மாதம் வரை காத்திருக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சரவை, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்த மசோதாவுக்கு மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை குழுவில் ஒப்புதல் பெறப்பட்டதாகவும் தெரிய வருகிறது. இந்த புதிய திருமண சட்ட திருத்தத்தின் படி, விவாக ரத்தின் போது, கணவரின் பரம்பரை சொத்திலும், பிரியும் மனைவுக்கு உரிமை உண்டு என்பது பெண்களுக்கு பெருமை தரும் விஷயமாக இருக்கிறது என்பது சட்ட நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்து!
0 Responses to பெண்களுக்கு சாதகமாக மாறுகிறது திருமண சட்டம்!: விவாக ரத்தின்போது கணவரின் பரம்பரை சொத்தில் இழப்பீடு!