சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட எல்லாப் புலிகளையும் தம்முடன்
வைத்துக் கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், அத்துமீறிய ஆட்சிக்கு எதிராக
கருத்து வெளியிடுகிறவர்களை நோக்கி புலிப்பட்டம் சூட்டுகின்றனர் என்று
பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றஞ்சாட்டியுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலானது என்றார். ஊடக சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் என்கிற விடயத்தை அரசாங்கம் ஒட்டுமொத்தமாக ஒடுக்கவே நினைக்கின்றது. காத்திரமான படைப்பாளிகளினால் இலங்கையில் திரைப்படங்களைக் கூட தயாரிக்க முடியவில்லை. பறக்கும் மீன் (Flying Fish) என்கிற தனி மனிதர்களின் உணர்வுகள் பற்றி பேசும் படத்தை இராணுவத்தினருக்கு அவப்பெயர் ஏற்படுத்துகின்றது என்று கூறி அரசு தடைசெய்துள்ளது. இது சட்டத்துக்கு முரணானது என்று அவர் குறிப்பிட்டார்.
இராஜகிரியவிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு கூறினார். இலங்கையில் திரைப்படங்களின் தணிக்கை மற்றும் தரக்கட்டுப்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக திரைப்படக் கூட்டுத்தாபனமும், திரைப்பட தணிக்கை சபையும் இருக்கிற போது சிலரின் தவறான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டு படமொன்றை தடைசெய்யும் உரிமை பாதுகாப்புச் செயலாளருக்கு இல்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பிரான்ஸ்- இலங்கை கூட்டுத் தயாரிப்பில் பறக்கும் மீன் (Flying Fish) என்கிற திரைப்படத்தை 2011 ஆம் ஆண்டு உருவாகியது. குறித்த படத்தின் பிரத்தியேக காட்சியொன்று பிரான்ஸ் தூதுவராலாலயத்தில் அண்மையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஆனாலும், குறித்த படத்திலுள்ள காட்சிகள் சில இலங்கை இராணுவத்தினருக்கு அவப்பெயர் ஏற்படுத்துகின்றது என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு பிரத்தியேக காட்சி இரத்து செய்யப்பட்டதுடன், படமும் முற்றாக இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அரசாங்கமே ஆட்சியில் உள்ளது:மங்கள சமரவீர