Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழர் விளையாட்டுத்துறையாலும் உதைபந்தாட்ட, கரபந்தாட்ட, துடுப்பெடுத்தாட்ட போட்டிகள் சம்மேளனத்தின் அனுசரணையுடன் ஆண்டு தோறும் நடாத்தி வருகின்றது. இன்று கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஆதரவுடன் மாவீரர் நினைவு சுமந்த கரப்பந்தாட்டப் போட்டி வன்சன் மைதானத்தில் நடாத்தப்பட்டது.

ஈகைச்சுடரினை மாவீரர் மணிமாறனின் சகோதரர் அவர்கள் ஏற்றி வைத்து அகவணக்கம் செய்யப்பட்டது. இன்றைய போட்டிகளில் கழங்கங்களின் பங்கு பற்றல் பற்றியும், மாவீரர்கள் எதற்காக தமதுயிரை கொடுத்தனர் என்பதையும், இன்றைய நாள் நாம் வாழும் பிரான்சு தேசம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து போராடி தனது நாட்டை மீட்டு சுதந்திரநாளினை கொண்டாடுகின்றது என்றும் நாம் மானத்தோடும், மரியாதையோடு, மதிப்போடும் வாழ்வதற்கு வழியேற்படுத்தி தந்தவர்கள் மாவீரர்கள் என்றும் இவர்களை நாம் இதயத்தில் வைத்து பூசிக்க வேண்டும் என்றும் மாறாக தூசிக்கக் கூடாது என்றும் இன்றைய நாளில் தனிப்பட்ட ஒரு கழகம் தனியே கரப்பந்தாட்டப்போட்டியை நடாத்துவது வேதனைக்குரியதொரு நிகழ்வு என்றும், ஆனாலும் மாவீரர்களுக்கு மதிப்பளித்து அதனை சிறப்பித்து கரப்பந்தாட்டப்போட்டியில் பங்குபற்றிய கழகங்களுக்கு சம்மேளனத்தின் சார்பிலும், விளையாட்டுத்துறையின் சார்பிலும் நன்றி கூறப்பட்டது.

இவையாவும் வரலாற்று பதிவில் பதிவாகப்போகும் ஓர் விடயம் எனவும் கூறப்பட்டது.
பங்கு பற்றிய கழகங்கங்கள் யாவும் சிறப்பாக போட்டிபோட்டு விளையாடிச்சென்றனர் . இன்றைய நாளில் மூன்றாவது இடத்திற்கான போட்டியும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதலாம், இரண்டாம் இடத்திற்கான போட்டியும் மாவீரர் மெய்வல்லுனர் இறுதிப்போட்டி அன்று இடம்பெறவுள்ள.

அதேபோலவே 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான உதைபந்தாட்டப்போட்டியும் நடைபெற்றது. நெய்தல் விளையாட்டுக்கழகத்திற்கும், சென் பற்றிக்ஸ் விளையாட்டுக்கழகத்திற்கும் நடைபெற்ற போட்டியில் 1 க்கு 4 என்ற அடிப்படையில் சென் பற்றிக்ஸ் விளையாடி வெற்றிபெற்றிருந்தது.

0 Responses to பிரான்சில் தமிழீழ தேசியமாவீரர் நினைவு சுமந்த போட்டிகள் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com