தமிழீழ தேசிய மாவீரர் நினைவாக பிரான்சில் தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுனர் போட்டி 2103 20 வது தடவையாக நடாத்தப்படுகின்றது.
அதன் ஆரம்ப போட்டிகளாக இன்றும்,13ம் 14.07.2013ம் திகதிகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. 13ம் திகதி இன்று வன்சன் மைதானத்தில் குண்டு போடுதல், ஈட்டி எறிதல், தட்டு எறிதல் போன்ற போட்டிகள் இடம் பெற்றிருந்தன.
காலை 10.00 மணிக்கு தொடக்க நிகழ்வாக ஈகைச்சுடர் ஏற்றல் இடம் பெற்றது அதனை திருகோணமலையில் நடைபெற்ற தாக்குதலில் வீரச்சாவை தழுவிக்கொண்ட வீரவேங்கை கப்டன். ஆபனாவின் சகோதரர் ஏற்றி வைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டு போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பிற்பகல் 5.00 மணிவரை தொடர்ச்சியாக அனைத்துப்போட்டிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றன. போட்டியாளர்களும் வெற்றியை தமதாக்குவதற்கு கடுமையான போட்டிகள் நடைபெற்றன.
0 Responses to பிரான்சில் 20 வது ஆண்டு தமிழீழ தேசிய மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுனர் போட்டிகள்