Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உத்திரகண்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை குடியேற்ற வன நிலங்கள் ஒதுக்கப்படும் என்று, மத்திய சுற்றுசூழல் நல துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார்.

மத்திய வனம் மற்றும் சுற்று சூழல் நலத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன், உத்திரகண்டில் வெள்ளத்தால் பாதிப்படைந்த இடங்களைப் பார்வையிட்டார். அப்போது, "உத்திரகண்ட் மாநிலத்தின் 65 சதவிகித நிலப்பகுதி வனத்தால் சூழப்பட்டுள்ளது. அது சுற்று சூழலுக்கு நல்ல சேவை புரிந்து வருகிறது.

அத்தகையை வன நிலங்களை கிராம மக்களை மீள் குடியேற்றம் செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளள அரசு விரும்புகிறது. இதுத் தொடர்பான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மாநில அரசிடம் கேட்டுள்ளோம். அந்த யோசனையை அனுதாபத்துடன் பரிசீலிப்போம்.

அதோடு ஆறுகளில் படிந்துள்ள சேறு, சகதிகளை அகற்றுவது தொடர்பான திட்ட யோசனையை சமர்ப்பிக்குமாறும் அம்மாநில முதல்வரை கேட்டுக் கொண்டுள்ளோம். உத்திரகண்டுக்கு பசுமை போனஸ் வழங்க வேண்டும் என்கிற அம்மாநில முதல்வர்  விஜய் பகுகுணாவின் கோரிக்கையை கொள்கை அளவில் ஏற்று கொள்கிறோம். அது குறித்து திட்டக் கமிஷனிடம் வலியுறுத்துவேன்." என்று கூறியுள்ளார் ஜெயந்தி நடராஜன்.

0 Responses to உத்திரகண்டில் பாதிக்கப்பட்ட மக்களை குடியேற்ற வன நிலங்கள் ஒதுக்கப்படும்!:மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தகவல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com