Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காதல் திருமணம் செய்ததால் எங்களை கவுரவ கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள். எனவே பாதுகாப்பு தர வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் மாணவி வழக்கு தொடர்ந்தார். 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டியை சேர்ந்தவர் சத்தியபிரியா என்ற ஷாஜிதா (வயது 19) பட்டதாரி. இவர், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ’’எனது சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் அம்மன் பேட்டை. இந்து மதத்தை சேர்ந்தவள். தஞ்சாவூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது தஞ்சாவூர் மங்களாபுரத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்த தொண்டியை சேர்ந்த ஜகுபர் சாதிக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 

ஒருவரையொருவர் காதலித்தோம். இதனால் என்னை கல்லூரிக்கு செல்லவிடாமல் வீட்டில் அடைத்து வைத்து கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சித்தனர். கடந்த 17.5.2013 அன்று வீட்டை விட்டு வெளியேறிய நான், ராமநாதபுரத்தில் உள்ள ஜமாத்தில் 24.6.2013 அன்று ஜகுபர்சாதிக்கை திருமணம் செய்து கொண்டேன். 

திருமணத்துக்கு முன்பு எனது பெயரை ஷாஜிதா என்று மாற்றிக்கொண்டு இஸ்லாமிய மார்க்கத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். நானும், எனது கணவரும் கணவன்-மனைவியாக வாழ்ந்து வருகிறோம். நான், கலப்பு திருமணம் செய்து கொண்டதை அறிந்து எங்கள் ஊரில் உள்ளவர்கள் எங்களை பழிவாங்கும் நோக்கில் கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகின்றனர்.

என்னையும், எனது கணவரையும் கவுரவ கொலை செய்ய வேண்டும் என்று சிலர் எங்களை கண்காணித்து வருகின்றனர். இதனால் எங்களது உயிருக்கு ஆபத்து உள்ளது. 

இதுகுறித்து தொண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றேன். அப்போது போலீஸ் இன்ஸ் பெக்டர், எனது உறவினர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு எங்களை மிரட்டி வருகிறார். எனவே, எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்’’என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

மனுதாரர் சார்பில் வக்கீல்கள் எஸ்.எம்.ஏ.ஜின்னா, அப்துல்கபூர் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் மேஜர் என்பதால் அவர் தனது துணையை தேர்வு செய்ய அனைத்து உரிமையும் உள்ளது.

எனவே கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினருக்கு தொண்டி போலீசார் தொந்தரவு கொடுக் கக்கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை வருகிற 29-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

0 Responses to கலப்புத்திருமணம் செய்ததால் கவுரவ கொலை செய்ய திட்டம்: மாணவி வழக்கு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com