சிலர் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாகவும், தனக்கு பாதுகாப்பு அளிக்க கோரியும் திருநங்கை ரோஸ் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
தொலைக்காட்சிகளில் தோன்றி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், சில சினிமாக்களிலும் நடித்திருப்பவர் திருநங்கை ரோஸ்.
இந்நிலையில் இன்று காலை சென்னை காவல்துறை அலுவலகத்துக்கு வந்த ரோஸ் புகார் மனுவொன்றை அளித்துள்ளார்.
அதில், சினிமா துறையை சேர்ந்த சிலர் தன்னை கொல்ல முயற்சிப்பதாகவும், அவர்களிடம் இருந்து தன்னை காக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Responses to என்னை கொலை செய்ய முயற்சி: திருநங்கை ரோஸ் பரபரப்பு புகார்