Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாஜக ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று மாலை வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் பிரச்சார வியூகம் அமைப்பது குறித்து, அத்வானியுடன், மோடி தீவிரமாக ஆலோசித்ததாகவும் தெரிய வருகிறது.

தேர்தல் பிரச்சார வியூகம் அமைப்பது குறித்த இந்த ஆலோசனை கூட்டத்தில், பாஜக மூத்த தலைவர் எல் கே அத்வானியும் குஜராத் முதல்வரும், பாஜகவின் தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவருமான நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாஜக நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் குழுவில் உள்ள 12 பேரும் இதில் கலந்து கொண்டனர். மோடி பிரச்சாரக் குழுத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும். அதோடு, அத்வானியும் மோடியுடன் கலந்து கொள்கிறார் எனும் போது, என்ன வியூகம் அமைப்பார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. குஜராத்தில் நடந்த போலி எண் கவுண்டர் குறித்த குற்றப்பத்திரிகையால் நரேந்திர மோடிக்கு  ஏற்பட்டு இருக்கும் பின்னடைவை  சரி செய்வது எப்படி, என்று அத்வானி ஆலோசனை வழங்கியதாகவும் தகவல் தெரிய வருகிறது. அதோடு, காங்கிரசுக்கு சரியான பதிலடி எப்படி கொடுப்பது என்பது குறித்து, மோடியும் அத்வானியும் நீண்ட நேரம் பேசினார்கள் என்றும் தெரிய வருகிறது.

கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்கள் யாரையும் சந்திக்காத அத்வானி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசியுள்ளார் என்பது, டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 Responses to தேர்தல் பிரச்சார வியூகம்:டெல்லியில் அத்வானி-மோடி ஆலோசனை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com