வடக்கு மாகாண சபைத் தேர்தலை வெற்றி கொள்வதினூடு சர்வதேச ரீதியிலும் இராஜதந்திர வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அதனைக் கருத்தில் கொண்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்கிறது என்று அந்தக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபைத் தேர்தல் என்பது ஆட்சியைப் பிடிப்பதற்கான தேர்தல் மட்டுமல்ல. தமிழர்கள் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான இராஜதந்திர நகர்வுகளைச் செய்யத் தேவையான தேர்தல். மீண்டும் தமிழர்களின் குரலை உலகம் பூராவும் ஓங்கி ஒலிக்கச் செய்வதற்கான காலத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் மக்கள் அணி திரண்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு துறைநீலாவணை பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வீதிகள் அமைப்போம், வீடுகள் தருவோம் என்று சலுகைகளை வழங்கி தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லை. தமிழ் மக்களின் ஒரே நம்பிக்கையான கூட்டமைப்பு உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளையே தேர்தல்களினூடும் செய்கிறது. அதையே எதிர்காலத்திலும் செய்வோம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to வடக்கு தேர்தலை வெற்றி கொள்வதன் மூலம் சர்வதேச இராஜதந்திர வெற்றிகளையும் பெறுவோம்: பா.அரியநேத்திரன்