வடக்கு மாகாணத்தில் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவத்தின் பிரசன்னம் அதிகரித்துக் காணப்படுகின்றது.
இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை சீர் குலைக்கிறது என்பதை உணரக்கூடியதாக இருந்தது என்று இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.
இராணுவத்தினரின் பிரசன்னம் என்பது வடக்கு மக்களின் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் பின்னடவை ஏற்படுத்துகிறது. எனினும், வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை நல்லதொரு அறிகுறியாக தெரிவதாக அந்தக்குழு கூறுகின்றது.
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை சில தினங்களுக்கு முன்னர் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பாராளுமன்ற பிரதிநிகள் குழு வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களுக்கும் விஜயம் செய்தது. இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை தங்களுடைய விஜயத்தைப் பற்றி ஊடகங்களிடம் பேசியபோதே அந்தக் குழுவின் தலைவர் ஜீன் லெம்பர்ட் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவது நல்லதொரு செய்தி. அங்கு நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் நடைபெற வேண்டும். ஆனாலும், வடக்கு தேர்தல்களை ஐரோப்பிய ஒன்றியம் கண்காணிக்காது. மாறாக இலங்கையில் இடம்பெறும் தேசிய ரீதியிலான தேர்தல்களையே கண்காணிக்கும் என்று அவர் கூறினார்.
இலங்கையில் மோதல்களுக்குப் பின்னரான காலப்பகுதியில் கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் சில கொஞ்சமாக முன்னெடுக்கப்படுவதனை அவதானிக்க முடிகிறது. எனினும், அது முழுவீச்சில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஜீன் லெம்பர்ட் மேலும் தெரிவித்தார்.

0 Responses to வடக்கு மக்களின் இயல்பு வாழ்க்கையை இராணுவ பிரசன்னம் குலைக்கிறது : ஐரோப்பிய ஒன்றியம்