Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ் மாவட்டம் மற்றும் கொழும்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான மறைந்த தியாகராஜா மகேஸ்வரனின் சகோதரர் துவாரகேஸ்வரனின் தலைமையில் வடக்கு மாகாண சபைத் தேர்தலை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்கொள்ளவுள்ளது.

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யாரை களமிறக்குவது என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும், தியாகராஜா துவாரகேஸ்வரனை முன்னிறுத்தியே வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தியாகராஜா துவாரகேஸ்வரன் யாழ் தேர்தல் மாவட்டத்திலிருந்து வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் யாழ் தேர்தல் மாவட்டத்திலிருந்து போட்டியிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதிகமான விருப்பு வாக்கு பெற்றவர்கள் வரிசையில் இரண்டாவதாக வந்தார். குறித்த தேர்தலில் மகேஸ்வரனின் மனைவியான விஜயகலா வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினர் ஆகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to மறைந்த மகேஸ்வரனின் சகோதரரின் தலைமையில் வடக்கு தேர்தலில் களமிறங்குகிறது ஐ.தே.க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com