Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளமை நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுககு எந்த விதத்திலும் அச்சுறுத்தலாக அமையாது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து தென்னிலங்கை மக்களை குழப்பும் கருத்துக்களை சிலர் முன்வைத்து வருகின்றனர். ஆனாலும், சி.வி.விக்னேஸ்வரனின் குடும்ப பின்னணி, உத்தியோக அனுபவம் என்பன நாட்டை பிரிவினைகளுக்குள் தள்ளும் எந்த முனைப்மையும் காட்டவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 ”முன்னாள் நீதியரசரான விக்னேஸ்வரன் வடக்கு மாகாணத்தில் முதலமைச்சராக வருவது பிரச்சினைகளைத் தராது. அவரது தெரிவு தமிழ் மக்களின் பக்கத்திலிருந்து சிந்தித்து எடுக்கப்பட்டுள்ளது. அது அச்சுறுத்தலானது அல்ல. விக்னேஸ்வரனின் பேட்டிகள் மற்றும் ஊடக உரைகளை அண்மைக்காலத்தில் பார்க்க கிடைத்தது. அதில், பாதிக்கப்பட்டுள்ள மக்களின் அபிவிருத்தி மற்றும் உரிமைகள் பற்றியே அதிகம் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். மாறாக பிரிவினைக் கருத்துக்களை முன்வைக்க வில்லை” என்றார் அமைச்சர்.

 அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலம் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று சி.வி.விக்னேஸ்வரன் கருத்து வெளியிட்டுள்ளார். இதன்மூலம், அவர் எல்லா சமூகத்தோடும்-தரப்பினரோடும் எவ்வளவு இணக்கப்பாட்டோடு செயற்பட விரும்புகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிவதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to சி.வி.விக்னேஸ்வரனின் நியமனம் அச்சுறுத்தலானது அல்ல: அமைச்சர் ராஜித சேனாரத்ன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com