காங்கிரஸ் தலைவரின் தலையை வெட்டுவேன் என்று திரிணமுல் காங்கிரஸ் எம் எல்
ஏ மிரட்டல் விடுத்து இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேற்கு
வங்க மாநிலத்தில் 5 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது.
பிரச்சாரம் தீவிரமாக நடப்பதால், பல இடங்களில் காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் தொண்டர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
பிர்பம் மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் திரிணமுல் காங்கிரஸ் எம் எல் ஏ, கலந்து கொண்டு பேசினார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் பப்பி தத்தாவுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். நான் அவரின் தலையை வெட்ட ஒரு நிமிடம் கூட ஆகாது, என்று கூறியுள்ளார். அதே கூட்டத்தில் பேசிய பிர்பும் மாவட்ட திரிணமுல் காங்கிரஸ் தலைவர், சயேட்சை வேட்பாளர்களுக்கு யாரும் ஓட்டு போடாதீர்கள். சுயேட்சைகள் மிரட்டலாக இருந்தால் அவர்களின் வீடுகளுக்கு தீ வையுங்கள் என்றார். திரிணமுல் காங்கிரஸ் எம் எல் ஏ மற்றும் மாவட்ட தலைவரின் இந்த பேச்சு மேற்கு வங்க தொலைக் காட்சிகளில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனால் மேற்கு வங்கம் முழுவதும் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
வன்முறையைத் தூண்டும் விதமாக பேசிய திரிணமுல் காங்கிரஸ் எம் எல் ஏ, மற்றும் மாவட்ட தலைவர் இருவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ், இடது சாரிக் கட்சிகள் மற்றும் பாஜக தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். தேர்தல் கமிஷனிலும் இது தொடர்பாக புகார் செய்யப்பட்டுள்ளது. அம்மாநில காங்கிரஸ் தலைவர் பப்பி தத்தா இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சமூக விரோதிகளின் கூடாரமாக திரிணமுல் காங்கிரஸ் விளங்குவதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். மக்கள் தங்கள் வாக்கு சீட்டு மூலம் இதற்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

0 Responses to காங்கிரஸ் தலைவரின் தலையை வெட்டுவேன்: திரிணமுல் காங்கிரஸ் எம் எல் ஏ மிரட்டல்!