Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்ஸ் மதச்சார்பற்ற நாடு என்பதால் அங்கு பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் முகத்தை முழுமையாக மறைத்து பர்தா அணிய 2011 ஏப்பிரல் மாதம் தடை விதிக்கப் பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து  கடந்த வாரம் பாரிஸில் பர்தா அணிந்து சென்ற முஸ்லிம் பெண் ஒருவரை போலிசார் எச்சரித்திருந்தனர். இதனால் கோபமடைந்த அந்தப் பெண்ணின் கணவர் போலிசாரைத் திருப்பித் தாக்கியதால் அவர் கைது செய்யப் பட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரான்ஸில் வாழும் முஸ்லிம் மக்கள் பாரிஸ் நகரில் கடந்த சில நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கியமாக கைது செய்யப் பட்டவரை விடுவிக்கும் படி கோஷமிட்டனர். சாலையோரத்தில் இருந்த பல கார்கள் தீ வைத்துக் கொளுத்தப் பட்டன. ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 14 வயதுச் சிறுவன் ஒருவன் பலத்த காயத்துக்கு உள்ளாகியுள்ளான். வெள்ளிக்கிழமை மாலை இச்சிறுவனுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டதால் சனிக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளான். பல போலிஸ்காரர்களும் இக்கலவரத்தில் காயமடைந்துள்ளனர்.

சுமார் 250 இளவயதினர் வெள்ளி மாலை ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் போலிசார் மீது கற்களை வீசினர். போலிசார் பதிலுக்கு கண்ணீர்ப் புகைக் குண்டு பீய்ச்சி அடித்தனர். பிரான்ஸில் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணியத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர் அங்கு இதுவரை இது தொடர்பாக 700 வழக்குகள் போலிசாரால் பதிவு செய்யப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது அங்கு அரசியல் வாதிகளும் சமூகத் தலைவர்களும் மக்களை அமைதியாக இருக்கும் படி வேண்டியுள்ளனர்.

இதேவேளை பிரான்ஸின் உள்துறை அமைச்சர் மானுவேல் வால்ஸ் இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில் போலிசார் வர்த்தக நிலையங்களைத் தாக்குவதும் பொதுச் சொத்துக்களை நாசமாக்குவதும் எப்போதும் அனுமதிக்கப் படுவதில்லை என்பதுடன் இவை எந்தப் பிரச்சினைக்கும் தீர்வைக் கொண்டு வரப் போவதில்லை என ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

0 Responses to பாரிஸில் முஸ்லிம் பெண்கள் பொது இடத்தில் பர்தா அணிய விதிக்கப் பட்ட தடை மீறப்பட்டதால் வன்முறை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com