Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையைப் பிரித்து தமிழீழம் என்ற தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்கிற இந்தியாவின் கனவு என்றைக்கும் நிறைவேறாது.

அதற்கான எந்த முயற்சியையும் அனுமதிக்க மாட்டோம் என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால், தமிழ் மக்களுக்கு மீண்டும் இரத்தமும், கண்ணீரும், சுடுகாடுமே உறுதியாகும் என்றும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையோ, இந்தியாவையோ நம்பி மீண்டும் அழிவுகளைத் தேடிக்கொள்ளக் கூடாது. இனவாத அரசியலின் போக்கிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயணிக்கிறது. அது, தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியை என்றைக்கும் பெற்றுத்தராது. எனவே, அபிவிருத்தி மற்றும் நாட்டின் ஒருங்கிணைவு குறித்து தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும். அது, வடக்கிலுள்ள தமிழ் மக்களின் கைகளிலேயே உள்ளது என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜாதிக ஹெல உறுமய வடக்கு மாகாண சபைத் தேர்தலை அங்கீகரிக்கவில்லை. நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தலான மாகாண சபை முறைமை ஒழிக்கப்பட வேண்டும். அத்தோடு, யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டப்பட்ட சிங்கள மக்கள் மீண்டும் அங்கு குடியேற்றப்பட வேண்டும். அதுபோல, பிரிவினைகோரும்  துரோக அரசியலை நாட்டிலிருந்து இல்லாமல் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் கூட பிரிவினைவாத கோரிக்கைகள் முடிவுக்கு வரவில்லை. அந்த கோரிக்கைக்கு பின்னால் இந்தியாவே இருக்கின்றது. இந்தியா, இலங்கையைப் பிரித்து உருவாக்க நினைக்கும் தமிழீழம் என்றைக்குமே உருவாகாது. அதை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உணர்ந்து கொண்டு இணக்கமான அரசியலைச் செய்ய முன்னவர வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to இந்தியாவின் தமிழீழ கனவு இலங்கையில் நிறைவேற அனுமதியில்லை: ஜாதிக ஹெல உறுமய

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com