Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இனவாதத்தின் மூலம் தமிழ் மக்களை அச்சுறுத்தி அடிபணிய வைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் ஜாதிக ஹெல உறுமய செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் தமிழ் மக்களுக்கு கண்ணீரும், இரத்தமும், சுடுகாடுமே உறுதியாகும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்திருந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித்தவிசாளரும், ஊவா மாகாண சபை உறுப்பினருமான கே.வேலாயுதம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இனவாத அரசியல் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் வடக்கிலுள்ள தமிழ் மக்களையும் அடிபணிய வைத்துவிட வேண்டும் என்கிற எண்ணமே ஜாதிக ஹெல உறுமயவிடம் காணப்படுகிறது. அதனையே, சம்பிக்க ரணவக்க அடிக்கடி பிரதிபலித்து வருகிறார். இவ்வாறான அரசியல் அச்சுறுத்தலானது என்று கே.வேலாயுதம் கூறினார்.

அத்தோடு, நாடு சுடுகாடானால் பிணம் எரிக்கும் வேலைக்கு சம்பிக்க ரணவக்க பொருத்தமானவர். அவர் அதனையே எதிர்பார்த்து காத்திருக்கிறார் போல தெரிகிறது. வடக்கில் தேர்தலை நடத்த விடாது தடுத்துவிட வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய முயற்சித்தது. ஆனால், அது நடக்கவில்லை. இப்போது ஜனநாயக ரீதியில் தேர்தலை எதிர்கொள்ள தயாராகும் தமிழ் மக்களை அச்சுறுத்தி வருகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஜாதிக ஹெல உறுமய தமிழ் மக்களை அச்சுறுத்தி அடிபணிய வைக்க முயற்சிக்கிறது : ஐக்கிய தேசியக் கட்சி

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com