கவிஞர் வாலி மறைவையொட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
தமிழ்நாட்டின்
தலைசிறந்த கவிஞர்களில் ஒருவரான கருத்தாழக் கவிஞர் வாலி அவர்கள்
18-.7-.2013 பிற்பகல் இயற்கை எய்தினார் என்ற செய்தி நமக்கு மிகப்பெரும்
அதிர்ச்சியைத் தந்தது.
சில நாட்களுக்கு முன்கூட அவரை மருத்துவமனையில் சந்தித்தபோது, இன்முகத்தோடு அப்பொழுது வரவேற்ற அவர் தம் பண்பும், பாசமும் - கொள்கை வேறுபாடு உள்ள நம்மைப் போன்றவர்களிடம்கூட அகநக நட்புடன் பழகிய பாங்கும் எப்போதும் மறக்க இயலாது.

அவர்களின்
கருத்தாழம் மிகுந்த கவிதைகளும். திரைப்பாடல்களும் காலத்தை வென்றவை. அவை
மூலம் அவர் என்றும் வாழ்வார். “வேற்றுமையில் ஒற்றுமை” காண்பது எப்படி
என்பதைக் காட்ட அவரைப் போன்ற ஒரு வித்தகரை தமிழ்நாடு எளிதில் காணமுடியாது.
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், கலை உலகத்தாருக்கும் திராவிடர் கழகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், கலை உலகத்தாருக்கும் திராவிடர் கழகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு கூறியுள்ளார்.
0 Responses to கவிஞர் வாலிப் போன்ற ஒரு வித்தகரை தமிழ்நாடு எளிதில் காணமுடியாது! கி.வீரமணி இரங்கல்!