Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராகவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு ஆதரவாகவும் வவுனியா மற்றும் கிளிநொச்சி நகரங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளின் பின்னணியினில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அவரது பத்திரிகையுமே பின்னணியிலிருக்கின்றமை அம்பலத்திற்கு வந்துள்ளது.

வவுனியா மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சி என்ற அமைப்பின் பேரினிலேயே இந்த சுவரொட்டிகளுக்கு உரிமை கோரப்பட்டுமிருந்தது.உண்ணாவிரதம், மறியலுக்கு மாவை அண்ணன். மகுடம் சூடுவது விக்னேஸ்வரனா?, சகுனி தொடங்கியது பாஞ்சாலியை வைத்து சம்பந்தன் தொடங்குவது விக்னேஸ்வரனை வைத்தா?, சம்பந்தன் ஐயா சகலதும் தெரிந்த நீங்கள் சடுதியில் மாறியது ஏன்?, சந்தி சிரிக்க வைக்க பெற்ற தொகை எவ்வளவு?, மாவை அண்ணன் ஆணையிட்டால் புரட்சி வெடிக்கும் போன்ற வாசகங்கள் இந்த சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டிருந்தன.

இதேவேளை, கிளிநொச்சி நகரிலும் கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சி எனும் பெயரிலேயே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. பசியில் இருந்த போதும் சிறையில் இருந்த போதும் எமக்காய் உருகிய மாவை அண்ணனை எப்படி மறப்போம்?, சம்பந்தன் ஐயா உங்கள் முதலமைச்சருக்கு கோணாவிலும் கேப்பாபுலவும் எங்குள்ளது என்று தெரியுமா?, நாங்கள் துன்பப்பட்ட போது விக்கினேஸ்வரன் ஐயா எங்க போனவர்? போன்ற வாசகங்கள் இந்த சுவரொட்டிகளில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

வவுனியாவினில் நின்று செயற்படும் நபரொருவரிடம் தனது பத்திரிகை அலுவலகத்தினில் அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை குறித்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பின்னர் தனது பத்திரிகையினில் இது விசமிகளது நடவடிக்கையெனவும் பிரச்சாரம் செய்து செய்தி வெளியிட்டுள்ளார்.

0 Responses to இரா.சம்பந்தனுக்கு எதிரானா சுவரொட்டி விவகாரம்! பின்னணியினில் கூட்டமைப்பு எம்பி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com