Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


தேசிய உணவுப் பாதுகாப்பு குறித்த அவசர சட்டத்துக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இன்று ஒப்புதல் அளித்து விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதை அடுத்து, அடுத்த 6 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை நிறைவேற்றியாக வேண்டும் என்றபது நடைமுறை. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் தேர்தல் வாக்குறுதிகளில், உணவுப்பாதுகாபு மசோதாவை நிறைவேற்றுவதும் ஒன்று. அந்த திட்டம் கனவாகிப் போய்விடுமோ என்று மத்திய அரசு கவலை கொண்டு இருந்தபோதுதான், இதை அவசர சட்டமாக நிறைவேற்றிவிட வேண்டும் என்கிற மத்திய அரசின் முடிவுக்கு, மத்திய அமைச்சரவையிலும் ஒப்புதல் கிடைத்து விட்டது.

இந்த உணவுப் பாதுகாப்பு மசோதா குறித்த அவசர சட்டத்தை நிறைவேற்ற, இன்று மதியம் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்து விட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில் எதிர்வரும் 6 மதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்றும் தெரிய வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா, "ஏழைகளுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், அனைத்து தரப்பினருக்கும் பயன்பட்டு வரும் வகையில், தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவேண்டும்.அவசர சட்டத்தின் மூலம், இந்த திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து இருப்பது ஏழை மக்களை ஏமாற்றும் செயல்." என்று கூறியுள்ளார்.

0 Responses to தேசிய உணவு பாதுகாப்பு குறித்த அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com